இன்றைய ராசி பலன் – 03-03-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
தாய் வழியில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் கூடுதலான லாபம் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam

பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள்.வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

மிதுனம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, பிறகு விலகிவிடும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை மூலம் எதிர்பார்த்த காரியத்தில் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

கடகம் :
Kadagam
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தாய்மாமன் வருகையால் நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களை நம்ப வேண்டாம். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.

சிம்மம்:
simam
அனுகூலமான நாள். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இன்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவகம் பணிச்சுமையால் கூடுதல் நேரம் வேலை பார்ப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

கன்னி:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணம் வரக்கூடும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். தாய் வழியில் உதவி கேட்டு வருவார்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும்.

- Advertisement -

துலாம்:

மன தைரியத்துடன் காணப்படுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தாருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களை நம்பி பொறுப்புகளை ஓப்படைக்க வேண்டாம். வியாபாரம் சற்று மந்தமாக தான் இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

விருச்சிகம்:

புதிய முயற்சிகள் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். மாலையில் குடும்பத்தாருடன் விசேஷங்களுக்கு வெளியூர்
பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். தாய்மாமன் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

மகரம்:
magaram
புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். மாலையில் குடும்பத்தாருடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு செல்விர்கள். அலுவலக பனிக்காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்:

அதிர்ஷ்டமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு உண்டாகும். பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது. உடல் ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

மீனம்:

மன உறுதியுடன் இருப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழியில் உதவி கேட்டு வருவார்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். வியாபாரத்தில் வழக்கம் போல் பணிகள் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -