- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்றைய ராசிபலன் – 03 ஆகஸ்ட் 2024

இன்றைய ராசிபலன் – 03 ஆகஸ்ட் 2024

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களிடம் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாழ்க்கைத் துணையோடு இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வருமானம் பெருகும். சந்தோஷமான இந்த நாளில் இறைவழிபாடு செய்யவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்ப ரொம்ப தெளிவாக இருக்கும். எந்த பிரச்சனையிலும் சிக்கிக் கொள்ளாமல், கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக செயல்படுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் தரக்கூடிய நாள் தான். இருந்தாலும் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்யுங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அபரிவிதமான திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வெற்றி மேல் வெற்றிவாகை சூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். ஆனால் அதையெல்லாம் கடந்து செல்லக்கூடிய திறமையை கடவுள் உங்களுக்கு கொடுத்திருப்பான். குடும்பத்தோடு அம்மன் கோவிலுக்கு சென்று இன்று வழிபாட்டை மேற்கொண்டால் மேலும் நல்லது நடக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். வழிபாட்டில் மனம் ஈடுபடும். இதனால் வீட்டில் சில பல வேலைகளை செய்ய முடியாத சூழ்நிலை நிலவும். வேலை பளு அதிகமாக தான் இருக்கும். எந்த வேலை எப்படி இருந்தாலும் உங்களுடைய அன்றாட வேலையில் சோர்வு அடையக்கூடாது. அதை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலக வேலை, வியாபாரத்தில் இருக்கும் வேலைகள் எல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம். பொறுப்புகளை நழுவ விடாதீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எதிர்த்து பார்க்கலாம் என்ற ஒரு முடிவோடு இன்றைய நாளை நடத்திச் செல்வீர்கள். எதிரிகளா பயப்பட மாட்டீர்கள், மேனேஜரா பயப்பட மாட்டீர்கள், எல்லோருக்கும் ஒரு பதில், எல்லோருக்கும் ஒரு தீர்வை நுனி நாக்கிலேயே வைத்திருப்பீர்கள். இதனால் இன்று உங்களுடைய போக்கு கடவுள் விட்டபோக்கு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீக வழிபாட்டில் அதிக அக்கறை காட்டுவீர்கள். கணவரின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும். மன நிம்மதி இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரவும். குடும்பத்தில் இருந்து வந்த சுப காரிய தடைகள் விலகும் மங்கலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று நல்ல பெயர் எடுப்பீங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய கடமைகளை சரியாக பார்ப்பீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய முதலீட்டுக்காக வங்கிக் கடன் முயற்சி செய்யலாம். நிச்சயம் உங்களுடைய முயற்சிகள் பல மடங்கு வெற்றியைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்கள் இன்று எப்படியாவது எல்லா முக்கியமான வேலைகளையும் சரிவர முடித்து விட வேண்டும் என்றுதான் காலையில் கண்விழிப்பீர்கள். ஆனால் ஏனோ தெரியாது உங்களை நோக்கி பல தடைகள் வர தொடங்கும். ஆனால் தடைகளை கண்டு பயந்து அப்படியே உட்கார்ந்து விடக்கூடாது. பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் போது நிச்சயம் உங்களுக்கான வெற்றி இன்று கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். உங்களுடைய வேலையை செய்ய விடாமல் தடுப்பதற்கு தடைகள் வரலாம். மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்கி கொடுக்க சில பேர் சூழ்ச்சி செய்வார்கள். அதை எல்லாம் தாண்டி உங்களுடைய உழைப்பின் மீதும் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். எதிரிகளை வீழ்த்தக்கூடிய தைரியத்தை கடவுள் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பான்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் செய்வதில் சில தடைகள் வரும். புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுவது நல்லது. அவசியமான வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். எதிரிகளை சமாளிப்பதில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். உங்களுக்கு தொல்லை கொடுக்க உங்களை சுற்றி நான்கு பேர் கட்டாயம் இருப்பார்கள். அதையெல்லாம் தாண்டி வெற்றிக்கான கொஞ்சம் சிரமப்பட வேண்டிய சூழ்நிலைதான் இன்று.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் அலைச்சல் ஏற்படும். கொஞ்சம் செலவுகளும் அதிகமாக இருக்கும் சேமிப்பு கரையும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்பட வேண்டும். எதிரிகளை குறைத்து எடை போடக்கூடாது. போனது போகட்டும் என்று விட்டுவிடுங்கள். பிரச்சனைகளை யோசித்துக் கொண்டே இருக்காதீர்கள். இதற்கு மேல் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். இல்லற வாழ்க்கை இனிக்கும்.

சற்று முன்