இன்றைய ராசி பலன் 03-06-2020

Today Rasi Palan Tamil
- Advertisement -

மேஷம்
இன்றைய நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாகத்தான் அமையப்போகின்றது. பணவரவு அதிகரிக்கும். சேமிப்பையும் உயர்த்திக் கொள்ளுவது நல்லது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட போகிறது. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பாராத பாராட்டைப் பெற போகிறீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள், இன்று குடும்பத்தோடு சந்தோஷமாக பொழுதை கழிக்க போகிறீர்கள். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி நிலவும். வீண் விரயம் ஏற்படும். அலுவலக பணியில், உங்களுடன் பணிபுரிபவர்கள், நீங்கள் கேட்காமலேயே உதவிகளை செய்ய முன்வருவார்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்ற ஆச்சரியத்தை தரக்கூடிய சில விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் அனுசரித்து சென்றால், சண்டையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வார்த்தையில் கவனம் தேவை. தொழிலில் நிதானத்தோடு செயல் படுவது நல்லது. அலுவலகப் பணியில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது. வாகனத்தில் செல்லும் போது மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். வேலையில் அலட்சியம் வேண்டாம். வேலையை சுறுசுறுப்பாக முடிக்கும் பட்சத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அற்புதமான நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. உங்களை, எல்லோரும் பாராட்டும் அளவிற்கு திறமையாக பேசப் போகிறீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும். உடல் நலனில் மட்டும் சற்று அக்கறை தேவை.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சற்று சுமாரான தினமாகத்தான் இருக்கப்போகின்றது. உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக முடித்து விட்டால் பிரச்சனைகள் வராது. சோம்பேறித்தனம் பட்டு அமர்ந்து விடாதீர்கள். எல்லோரையும் அனுசரித்துப் போவது நல்லது. ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு, இன்று எதிர்பார்த்த காரியம் வெற்றி அடைவதில் சிறிது தாமதம் ஏற்படும். தொடர்ந்து, முயற்சித்தால், விரைவில் வெற்றி அடைந்து விடலாம். சோர்ந்து போக வேண்டாம். இறை வழிபாட்டில் மனதை ஈடுபடுத்துவதன் மூலம் நன்மை நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று மன தைரியத்தோடு செயல்படப் போகிறீர்கள். அலுவலகப் பணியில் மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் பிரச்சனை ஏற்படும். குடும்ப ரகசியங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. இன்று யாரையும் நம்பி உங்களது பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று, அவர்களுடைய வேலையை சுறுசுறுப்பாக நிறைவேற்றும் தினமாக தான் அமையப்போகின்றது. அலுவலகத்தில் நல்ல பெயரை வாங்க போகிறீர்கள். சொந்தத் தொழில், சில விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையப் போகின்றது. எல்லோரும் பாராட்டும் அளவிற்கு உங்களது நடவடிக்கை அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருக்கப்போகிறார்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை ஒன்று இன்று தீர்வுக்கு வரும். உங்களது கை அலுவலகத்தில் ஓங்கி நிற்கும். நீங்கள் சொல்வதை உங்கள் முதலாளி, மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உங்களது பேச்சில் திறமை அதிகரிக்கப் போகின்றது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சற்று பொறுமையோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது. எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுத்துவிட வேண்டாம். நிதானமாக யோசித்து சிந்தித்து செயல்பட்டால் வரப்போகும் பிரச்சனைகள் குறையும். தினம்தோறும் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு உங்களது வேலையை முடிக்க போகிறீர்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் தொடங்கலாம். உடல் நிலை மேம்படும். வியாபார முன்னேற்றதோடு செல்லும். பேச்சில் சாதுர்யம் வெளிப்படும். எப்போதும் வார்த்தையில் நிதானம் தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -