- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 04 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 04 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். விடுமுறை நாள் என்பதால் பெருசாக பிரச்சனைகள் வராது. சொந்த பந்தங்களோடு பேசும் போது நிதானமாக பேசி பழகுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய புது முடிவுகளை வீட்டில் இருப்பவர்களிடம் இன்று சொல்லாமல் இருப்பது நல்லது. நிறைய எதிர்ப்புகளை சந்திக்கக்கூடிய நாளாக இந்த நாள் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். மனக்குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். நிதிநிலைமை சீராகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலையான நாளாக தான் இருக்கும். பழைய கஷ்டங்களை எல்லாம் நினைத்து வருத்தப்பட்டு, இந்த நாளையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம். நடந்ததை எல்லாம் நம்மால் மாற்ற முடியாது. இழந்த காலத்தை மறந்து விட்டு, எதிர்காலத்தை பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். இறை நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இல்லாத சூழ்நிலை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருந்தாலும், மன திருப்தி அற்ற சூழ்நிலை உண்டாகும். இறைவழிபாடு செய்யுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட தூர பயணங்கள் மன அமைதி கொடுக்கும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலைமை சீராகும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள். இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது அவசியம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கையும் உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்திருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். உங்களுக்கு விடுமுறை நாள் என்றால் பிரச்சனை இல்லை. இன்று முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால், 1/2 மணி நேரத்திற்கு முன்கூட்டியே அந்த வேலைக்கு செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனத்தோடு இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்ப வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பொது இடங்களில் பேச வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. விடுமுறை நாள் என்பதால் கடமையிலிருந்து தவறக்கூடாது. உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பது நல்லது. நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். சில பேர் சொந்த ஊரிலேயே இருப்பீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், உறவினர்களோடு நேரத்தை செலவு செய்து இந்த நாளை உற்சாகமாக கழிப்பீர்கள். வேலை வியாபாரம் என்று இருந்தால் கூட பெருசாக பாதிப்புகள் இருக்காது. எல்லாம் உங்களுக்கு சாதகமாக தான் நடக்கும். ஆக மொத்தம் இந்த நாள் ஒரு இனிய நாள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். வாரா கடன் வசூல் ஆகும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். சொந்தபந்தங்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாட்டில் இருந்து வெளிவருவீர்கள். உறவுகளோடு ஒன்று சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஈகோ இல்லாமல் விட்டுக் கொடுத்து நடந்தால் நல்லது. வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனத்தோடு இருக்கனும். ஹெல்மெட் போடணும், சிக்னலை மீறக்கூடாது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியாக இருக்கும். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் வரும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வதில் கொஞ்சம் மன வருத்தம் இருக்கும். வேலையில் முழு கவனத்தை செலுத்துவீர்கள். வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும்

சற்று முன்