இன்றைய ராசி பலன் 04-06-2020

Today Rasi Palan Tamil
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், இன்று நினைத்த காரியத்தை சாதிப்பதற்கு அதிகப்படியான முயற்சியை எடுத்து வெற்றியும் அடைவார்கள். அலுவலக பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு நல்ல பெயரையும் வாங்கப் போகிறீர்கள். வருமானத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. மன தைரியத்தோடு செயல்படும் நாள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து சந்தோஷமாக இருக்க போகிறார்கள். சொந்தத் தொழில் முன்னேற்ற தோடு செல்லும். எதிர்பாராமல் ஒருவர் செய்யப்போகும் உதவி, உங்களுக்கு பெரிய நன்மையை தரப் போகின்றது அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று அதிகமாக சிந்திக்கப் போகிறார்கள். எந்த வேலையை எப்படி செய்தால், சுலபமாக முடியும் என்று கண்டுபிடித்து, வெற்றி வாகை சூட போகிறீர்கள். பாராட்டு மழைதான் உங்களுக்கு. நினைத்ததை நிறைவேற்ற போறீங்க. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை.

கடகம்
கடக ராசிக்காரர்கள், உங்களுடைய கடமையில் தவறாமல் செயல்படப் போகிறீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் சின்ன சின்ன பிரச்சனை ஏற்பட்டு விலகும். அலுவலகப் பணி சுமுகமாக செல்லும் சொந்த தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அதிரடியாக செயல்படப் போகிறீர்கள். பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, என்ற எண்ணத்தோடு சில காரியங்களை செய்வதன் மூலம், நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். இதனால் உங்களுக்கு பாராட்டும் கிடைக்கப்போகிறது. ஆக மொத்தத்தில் இன்று தொட்டதெல்லாம் வெற்றிதான்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்பட்டு வெற்றி அடைய போகிறீர்கள். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக சில வேலைகளை செய்து, பாராட்டையும் பெற போகிறீர்கள். சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொந்த தொழிலில் புதிய முதலீடுகள் மட்டும் செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். அனாவசிய பேச்சை குறைத்துக் கொண்டால், பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிகாரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். யாரை நம்பியும் பணம் கொடுக்கவும் கூடாது. யாரிடமிருந்தும் கடனாகப் பணம் பெறவும் கூடாது. முக்கியமான வேலைகளை நாளை தள்ளி போடுவது உத்தமம். தினசரி வேலைகளை கவனமாக செய்து கொள்ளுங்கள்.

தனுச

தனுசு ராசிக்காரர்கள் இன்று எல்லோருக்கும் மிகவும் பிடித்தமாதிரி நடந்துகொள்ள போகிறீர்கள். உங்களது பேச்சு திறமையால் அனைவரையும் வசீகரிக்க போரீங்க! மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். சந்தோஷமான நல்ல நாளாக தான் இன்று தொடங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று பிரச்சனை வந்தாலும் கூட, சுலபமாக சமாளித்து விடுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது மட்டும் சற்று கவனமாக இருக்கவேண்டும். முடிந்தவரை பயணத்தை செய்யாமல் இருப்பது உத்தமம். அலுவலகப் பணியில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க போகிறீர்கள். பல நாட்களாக இருந்து வந்த பிரச்சனை இன்று ஒரு முடிவுக்கு வரும். கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொண்டால் பிரச்சினைகள் வராது. நிதானம் அவசியம் தேவை என்பதை மறக்காதீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்பட்டு இன்று செய்ய வேண்டாம். ஒன்றுக்கு பலமுறை யோசித்து முக்கியமான முடிவுகளை எடுப்பது அவசியம். அலுவலக பணி எப்போதும் போல் செல்லும். சொந்த தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். 5 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -