இன்றைய ராசி பலன் – 05-01-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் ஆலோசனை அதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

இதையும் படிக்கலாமே:ஜனவரி மாத பலன்

ரிஷபம்:
rishabam
உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர் களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான விஷயங்களில் யோசித்து முடிவு எடுக்கவும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கடகம் :

- Advertisement -

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

சிம்மம்:
simam
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

மகிழ்ச்சியான நாளாக அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங் குவது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைப்பதுடன் சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

விருச்சிகம்:

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். முக்கிய முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு:

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி களைத் தொடங்குவது சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மகரம்:
magaram
வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:ஜனவரி மாத பலன்

கும்பம்:

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களு டைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

மீனம்:

தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்று வீர்கள். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவன மாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ராசி பலன், ஜோதிடம், ஆன்மீகம் என அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -