இன்றைய ராசி பலன் – 05-04-2021

rasi palan - 5-4-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றி இருப்பவர்களை உங்களுடைய திறமையின் மீது நம்பிக்கை இல்லாதது போல் பேசுவார்கள். எதற்கும் கலங்காமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபடுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நெடிய போராட்டம் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இதுவரை நிலுவையில் வைத்திருந்த கடன் பாக்கிகளை வசூல் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்கக்கூடிய மரியாதை அதிகரிக்கும். முருக வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் உங்களை புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்ப நிலை நீங்கி முன்னேற்றம் நன்றாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கூடுதல் அக்கறை தேவை. அம்பிகை வழிபாடு செய்யுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் துணிச்சலுடன் செயல்படுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்க பெரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் கூடுதல் பளு இருக்கும். மீனாட்சி அம்மனை வழிபடுங்கள்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் படபடப்புடன் காணப்படுவீர்கள். மனதில் இனம் புரியாத குழப்பம் நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிலும் முன் ஆலோசனை இல்லாமல் செயல்படுவது நல்லது அல்ல. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். துர்க்கை வழிபாடு நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களை பிரிந்து சென்ற ஒரு உறவு வந்து சேரக் கூடிய அமைப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொலைதூரப் பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுக்க கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். இதுவரை மன இறுக்கத்திலிருந்து நீங்கள் இன்று சற்று தளர்வுடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறக் கூடிய அமைப்பாக உள்ளது. சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்ப நிலை நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவதற்கு உரிய சந்தர்ப்பங்கள் அமையும். குரு பகவானை வழிபடுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். சுய தொழிலில் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு உள்ளது, எனவே கவனத்துடன் இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட கால கனவுகள் நிறைவேறும். இறை வழிபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் மன அமைதி உண்டாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் மேன்மை தரக் கூடிய அமைப்பு என்பதால் கூடுமானவரை நல்ல விஷயங்களை நிகழ்த்துவது நல்லது. தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனஅமைதி உண்டாக வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பிள்ளையாரை வழிபடுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் ராஜயோகம் ஏற்படக் கூடிய அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை நீங்கி புதியதொரு யுக்திகளை கையாளுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

English Overview:
Here we have Today Rasi Palan 5-4-2021.

- Advertisement -