இன்றைய ராசி பலன் 05-06-2020

rasi palan - 5-6-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் செலவுகள் ஏற்படலாம். உங்கள் மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் மிகவும் தேவை. தாய்வழி உறவினர்களால் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பணவரவுகளுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீங்கள் பேசும்போது வார்த்தையில் நிதானம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணவரவு தாராளமாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீடு வாகனம் வாங்கும் யோகமுண்டு. இன்று உங்களுக்கு பல வகையிலும் அனுகூலமான நாளாக இருக்கும். அரசாங்க காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்ய வேண்டிவரும். வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். வாழ்க்கை துணையால் உறவுகளிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த பணயுதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். சக பணியாளர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. நீங்கள் எதையும் துணிச்சலாக செய்யும் மன தைரியம் உள்ளவர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்தவித முக்கிய முடிவுகளும் இன்று நீங்கள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தந்தை வழி உறவுகளால் பணம் வருவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பலத்தை அளிக்கும். நீங்கள் வெகு நாளாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கக் கூடும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். பணியாளர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகமாக உழைத்து விற்பனை அதிகரிப்பார்கள். குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்கள் சாமர்த்தியத்தால் அதனை எளிதில் சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களால் சிறு பிரச்சினை ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வெளிநாடு பயணம் செய்ய வேண்டி இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல்கள் ஏற்படும். காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் மறைமுக தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. பேசும்போது கவனமாக இருக்கவும் காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. தாய் தந்தையை மதித்து நடப்பது மிகவும் நல்லது. பணவரவு அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். மனைவிவழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்திற்காக ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் மிகவும் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த வித புதிய முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கலாம். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. பெரியவர்களை ஆலோசித்து நடப்பது மிகவும் நல்லது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மனைவிவழி எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் நண்பர்களால் சில பிரச்சினைகள் வரக்கூடும். புதிய முயற்சியாக இருந்தாலும் இன்று தவிர்ப்பது நல்லது. தந்தையிடம் சில மனக்கசப்புகள் ஏற்படும். பிரச்சினைகள் அதனை எளிதில் சமாளித்து விடுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சகோதரர்களுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் எதிரிகளை சமாளிக்கும் திறமை கொண்டவர்களாக விளங்குவீர்கள். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -