இன்றைய ராசி பலன் 06-06-2020

rasi palan - 6-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமானதாக அமையும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உங்கள் பிள்ளைகளின் வருங்காலத் திட்டம் உங்கள் விருப்பப்படி நிறைவேறும். தெய்வ அனுகூலமும் உண்டாகும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும் வாய்ப்புக்கள் உள்ளது. உங்களுடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள் உங்களை ஆதரிப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை கொண்டவர்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது. பழைய நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உங்கள் தாய் தந்தையிடம் விவாதங்களை செய்வீர்கள். நீங்கள் புதிய வேலைகளுக்காக எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனக்குழப்பம் அதிகமாக இருக்கும். இன்று உங்களுக்கு உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளது. உங்களுடைய உழைப்பால் உயர்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு மனை சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சக வியாபாரிகளிடம் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெகு நாளாக இருந்த மனக்குழப்பம் நீங்கும். நீங்கள் கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உங்களுடைய உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை மதிப்பார். உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அவசர முடிவை எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது மிகவும் நல்லது. நீங்கள் யாரையும் எளிதில் நம்பி விடவேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். அதனை சமாளித்து விடுவீர்கள். உங்கள் உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். உங்களுடைய பேச்சில் நிதானம் மிகவும் தேவை.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சுமுகமாக நடைபெறும் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள் என்று எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். நீங்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் அவசியம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களிடம் விவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது மிகவும் அவசியம்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்தவித வேலையும் எளிதில் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். உங்களுடைய பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றிவீர்கள். பழைய பிரார்த்தனைகள் செய்து முடிப்பீர்கள். வராத கடன் தொகை வந்துசேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் நட்பாக பழகுவது மிகவும் நல்லது. உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும் நாள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணம் கொண்டவர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வியாபார ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். அரசு சம்பந்தமான வேலைகள் அனைத்தும் நல்ல முறையில் முடிவடையும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தொட்ட காரியங்கள் அனைத்தும் செய்யும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாளாக இருந்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். உடல்நலம் சீராக இருக்கும். உங்கள் உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உங்களுடைய வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எந்தவித ஒப்பந்தங்களையும் கையெழுத்திடுவது தவிர்ப்பது மிகவும் நல்லது. எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் வெற்றி அடைவீர்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதனை நிதானமாக செய்வது மிகவும் நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது மிகவும் நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடமும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டவர்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்தவித கடினமான வேலையாக இருந்தாலும் அதனை எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்த காணப்படும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நீங்கள் அனுபவ அறிவால் சாதிப்பீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் நண்பர்களின் வருகை அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றியை தரும். நீங்கள் எந்த ஒரு செயல் செய்தாலும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆச்சரியப்படும் படி நடந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. பெற்றோரின் வார்த்தையை மதித்து நடப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.