இன்றைய ராசி பலன் – 07-04-2021

rasi palan - 7-4-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பாராத சில விஷயங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை வாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி பிரச்சனை நீங்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் வரவு உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இருந்த கடன் தொகைகள் வசூலாகும். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை. மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைப்பதில் கவனம் தேவை.

- Advertisement -

மிதுனம
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாளாக தடைபட்ட சில காரியங்கள் இனிதே நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. கணவன் மனைவி உறவு சிக்கல் நீங்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் பிரச்சனை ஒன்று தீர இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பநிலை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச் சிதைவு ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. மேலதிகாரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்களின் தொல்லை வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் பணவரவு அமையும். பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலை நிலவுவதால் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் பிரச்சினை இருக்கும். உத்யோகத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முடிவுகளை சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்களின் தொல்லைகள் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியே சுபச் செய்திகள் உண்டு.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் பேசும்பொழுது கனிவுடன் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய முன் கோபத்தால் தேவையற்ற இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் உண்டாகும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். தொடர்ந்து நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க போராட்டம் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு தகுந்த சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுய தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தகுதியறிந்து செயல்படுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் தேவையில்லாத பிரச்சினைகள், வம்பு வழக்குகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. புதிய முதலீடுகளை செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் அமைதியை நீடிக்க செய்ய விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் உருவாகும் என்பதால் கூடுமானவரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

English Overview:
Here we have Today Rasi Palan 7-4-2021.

- Advertisement -