இன்றைய ராசி பலன் – 08-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
இன்று புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படலாம். அதனால் கடன் வாங்கவும் நேரிடும். சிலர் மனதளவில் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் சிக்கனத்தை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பண வரவு குறையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனைவி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam
அனுகூலமான நாள். அரசு சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பெற்றோர்களின் உதவியை நாடுவீர்கள். சகோதரர்களால் செலவு உண்டாகும். கணவன் மனைக்குள் அந்நியோன்யம் ஏற்படும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்:
Midhunam
உடல் ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள், அவர்களால் புதிய நண்பர்களும் அறிமுகம் ஆவார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளை உற்சாகமாக முடிப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம் :
சிலர் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் செய்விர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் அனைவரும் ஆனந்தமாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம், சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிம்மம்:

- Advertisement -

இன்று மகிழ்ச்சியான நாள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு செல்விர்கள். அங்கு சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரலாம். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் வழக்கத்தைவிட லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கன்னி:

அனுகூலமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலர் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களின் மூலம் மேலோங்கி காணப்படுவீர். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

துலாம்:

பிள்ளைகளால் மகிச்சியாக காணப்படுவீர்கள். சிலர் உறவினர் வீட்டு விஷேஷங்களுக்காக பயணம் செய்ய நேரிடலாம். இன்று வீண்செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். வியாபாரதில் பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

- Advertisement -

விருச்சிகம்:

வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வீண்செலவுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவாக காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

தனுசு:

அரசாங்க காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படும். தாய் வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிறகு விலகி மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:
magaram

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரின் ஆலோசனைகளை பெற்று முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளை பணியாளர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு பிறகு விலகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று உற்சகமாக காணப்படுவீர்கள்.

கும்பம்:

சகோதரர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். உறவினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். அதனால் வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளவும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தாருடன் கோவில்களுக்கு செல்விர்கள். அலுவகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளவும். பெற்றோர்களின் ஆதரவும், அன்பும் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலக பணிகளில் கவனம் செலுத்துங்கள். சிலர் குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக்கொள்வீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -