இன்றைய ராசி பலன் – 09-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
அரசாங்கம் சார்ந்த காரியங்களில் பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். கணவன் மனைவிக்குள் அன்னோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் குறைவாகத்தான் இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam
இன்று மகிழ்ச்சியான நாள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் விலகி, மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். உறவினர்கள் வீட்டிற்கு பயணம் மேற்கொள்ள நேரிடலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

மிதுனம்:

புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்கள் வருகையால் வீண்செலவு ஏற்படும். அலுவலக சூழல் வழக்கம் போல இருக்கும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் முன்பைவிட விற்பனையும், லாபமும் அதிகரிக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

கடகம் :

இன்று சற்று உற்சாகமாக காணப்படுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலக பணிச்சுமையால் சில நேரம் சோர்வாக காணப்பட வாய்ப்புண்டு. . குடும்பத்தாருடன் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது . வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறைவாகத்தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
simam
உற்சாகமான நாளாக அமையும். சகோதரர்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய் வழி உறவுகளிடமிருந்து உதவி வந்து சேரும். அலுவலக பணிகளை சக பணியாளர்களை கொண்டு செய்து முடிப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மாலையில் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

பெற்றோர்களின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகத்தான் முடியும். சில முடிவுகளை குடும்பத்தாருடன் ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுங்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் முதலீட்டில் கவனத்துடன் செயல்படுங்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.

துலாம்:

இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். சகோதரர்களால் புதிய முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் வரும். பிள்ளைகளின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் பயணம் செய்ய நேரிடும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் நாளாக அமையும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் சிறுசிறு தடங்கல் ஏற்பட்டு விலகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறைவாகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் பயணம் செல்லும்போது ஜாக்கிரதையாக செல்வது நல்லது.

தனுசு:

இன்று அனுகூலமான நாள். கணவன் மனைவிக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதனால் வீண்செலவுகளும் ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டுபெருவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தை விட கூடுதலாக அமையும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
magaram
சிலர் குடும்பத்தாருடன் உறவினர்கள் வீட்டிற்கு பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலக பணிகளை உற்சாகமாக செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மாலையில் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

பெற்றோர்களின் உதவியை நாடுவீர்கள். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்களால் வீண்செலவு ஏற்படும். குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

மீனம்:

அனுகூலமான நாள். பயணங்களை குறைத்துக்கொள்ளுங்கள். உறவினர்கள் வருகையால் கருத்து வேறுபாடு ஏற்படும். நண்பர்களை சந்தித்து உறையாடுவீர்கள். அலுவலக பணிகள் வழக்கம்போல் காணப்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -