Rasi palan : இன்றைய ராசி பலன் – 09-04-2019

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரை மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அந்த 12 ராசிகளுக்குமான துல்லியமான தினசரி ராசி பலன்கள் இதோ.

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

நேரத்துக்கு சாப்பிட முடியாது. தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

மிதுனம்:
midhunam

புதிய முயற்சிகளைக் காலையிலேயே மேற்கொள்வது சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். மிருகசீரிடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்:
simmam

உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

துலாம்:
Thulam Rasi

நீண்டநாள்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

விருச்சிகம்:
virichigam

பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

மாலையில் நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். திடீர் செலவுகள் ஏற்படுவதன் காரணமாக சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். அனுகூலமாகும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்:
meenam

மனம் உற்சாகமாகக் காணப்படும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -