இன்றைய ராசி பலன் – 1-2-2021

rasi palan - 1-2-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தார் முன்னுரிமை அளிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வளர்ச்சி பாதை ஏற்றம் தரும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் துறையில் இருப்பவர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களும் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மன நிம்மதி இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருந்தாலும் சற்று கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்வு மேலோங்கும். பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதையும் தாண்டி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரித்து காணப்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நினைவுகளை ஆசைப்பட்டு பார்க்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட புதியதாக மாற்றி அமைப்பது முன்னேற்றத்தை தரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சீராக இருக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கிறது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய முதலீடுகள் மூலம் அதிக லாபம் உண்டாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் கடன் தொகைகள் வசூலாக கூடிய வாய்ப்புகள் உண்டு. வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கக்கூடும். மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அமைதியாக இருப்பது மன அமைதியைக் கொடுக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் அளிக்க கூடிய வகையிலான நாளாக அமைகிறது. உங்களுடைய வேடிக்கையான பேச்சாற்றலால் மற்றவர்களை எளிதில் ஈர்த்துவிடும் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களை சுற்றி இருப்பவர்களின் குணநலன்கள் அறியும் வாய்ப்பு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதனை விரிவு படுத்துவதில் ஆர்வமாக இருப்பீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஊடல்கள் வந்து மறையும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான பலன் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சாதக பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் பணவரவு சிறப்பாக அமையும். தாய்வழி உறவினர்கள் மூலம் அற்புதமான பலன்களை காணலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற நபர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை மக்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டென்சன் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -