இன்றைய ராசிபலன் – 10 அக்டோபர் 2023

daily-rasi-palan10
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். எதிரிகள் உங்களை வீழ்த்த சூழ்ச்சி செய்தாலும், அதிலிருந்து சுலபமாக தப்பித்துக் கொள்வீர்கள். முன்கோபடாதீர்கள். நிதானமாக யோசித்தால் நிச்சயம் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். எந்த ஒரு வேலையும் எடுத்தவுடன் வெற்றிகரமாக முடியாது. கொஞ்சம் இழுபறியாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சொந்த தொழிலில் எந்த ஒரு புதிய ஐடியாக்களையும் அறிமுகம் செய்ய வேண்டாம். செய்யும் வேலையை அப்படியே செய்தால் பிரச்சனை இல்லை.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். சந்தோஷம் இருக்கும். பதட்டம் இருக்காது. எடுக்கும் முடிவுகளில் ரொம்ப ரொம்ப தெளிவு இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பீர்கள். திறமையாக செயல்பட்டு சிக்கல்களை சரி செய்யக்கூடிய நாள் இந்த நாள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் கொஞ்சம் பயம் இருக்கும். சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கவும் வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீங்க. எதையும் மனதில் போட்டு குழப்பிக்காதீங்க. மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். நாளை எல்லாம் சரியாகிவிடும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சிக்கல் வர வாய்ப்பு உள்ளது. அதை சமாளிக்க கொஞ்சம் போராட வேண்டி இருக்கும். மற்றபடி பெருசாக பிரச்சனை இல்லை. எல்லாம் பிரச்சினைகளும் இந்த நாள் இறுதியில் சரியாகிவிடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். நீங்கள் தவறாக செய்யக்கூடிய காரியங்கள் கூட, உங்களுக்கு சரியானதாக மாறிவிடும். சௌகரியமான நாள் இது. கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் மனது சந்தோஷமடையும். இன்றைய தினம் யாரிடமும் கை நீட்டி கடன் வாங்க வேண்டாம்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நிறைய நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் நினைத்து கூட பார்க்காத நல்ல காரியம் ஒன்று நடக்கும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வரும். தாய்மாமன் உறவால் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உறவுகளிடம் மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை ரொம்பவும் பெருசாக இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப்படுவீர்கள். முன்கோபடுவீர்கள். இதை செய்தால் பிரச்சனை வருமா, அதை செய்தால் பிரச்சனை வருமா என்ற மன குழப்பம் இருக்கும். மனதை தெளிவுபடுத்த காலையில் எழுந்தவுடன் ஐந்து நிமிடம் குலதெய்வ வழிபாடு செய்யவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய சவால்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பிரச்சனைகளை சந்தித்து ரொம்பவும் சோர்ந்து போவீங்க. உடல் சோர்வு, மனசோர்வு ஏற்படும். உங்களுடைய பிரச்சனைகளை வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வார்கள். குடும்பம் உங்களுக்கு சப்போர்ட் ஆக இருக்கும். அதுவே உங்களுடைய வெற்றிக்கு காரணமாகவும் இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் குடும்பத்தை மறந்து விடுவீர்கள். குடும்பத்தில் முக்கியமான விஷயங்களை மிஸ் பண்ணக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வரவும் வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். வேலையும் முக்கியம், குடும்பமும் முக்கியம் என்று செயல்பட்டால் பிரச்சனை இல்லை.

கும்பம்

கும்பராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. வாழ்க்கை துணை சொல்படி கேட்டு நடக்க வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். சொந்த தொழிலில் அதிக கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. குறிப்பாக அதிக வட்டிக்கு நீங்கள் கடன் வாங்காதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்கும். சேல்ஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு டார்கெட்டை அச்சீவ் செய்ய ஆர்டர்கள் கிடைக்கும். நீங்கள் பிளான் பண்ண படி எல்லா வேலைகளையும் சரியாக முடித்து விடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சந்தோஷம் நிறைந்த நாள் இது.

- Advertisement -