மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்ன சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு போகக் கூடாது. நிதானத்தோடு சிந்தித்து செயல்படுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். அனுபவ சாலைகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். ஆனால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவுகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். நிதிநிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக ஒரு ஏமாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்து விடுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். பணம் தேவையான அளவு கையில் இருக்கும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளோடு பேசி நேரத்தை செலவு செய்ய நல்ல வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் இனிதே அமையும். இருந்தாலும் கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் கொஞ்சம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும். இருந்தாலும் உங்களுடைய வேலைகள் எல்லாம் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நடக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புது முடிவுகளை எடுக்கலாம். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திட முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் இருந்து வந்த சிரமங்கள் விலகும். ப்ரோமோஷனுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மன திருப்தி இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகள் எடுக்க வேண்டாம். புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். குடும்ப விஷயங்களை பொது இடங்களில் பேச வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் எதிர்ப்புகள் போராட்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எதிரி பிரச்சனை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பெரியவர்களிடம் பேசும் போது பணிவோடு நடந்து கொள்ளுங்கள். முன்கோபம் கூடாது. தலைகனம் இருக்கக் கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். மருத்துவ செலவுகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பிரச்சனை கொடுக்கும் நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் இருக்கட்டும். அவசர முடிவுகள் வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புது முயற்சிகள் வெற்றி தரும். செய்யும் வேலையில் மனநிறைவு இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை லாபம் பெருசாக இருக்காது. நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பணிவான அடக்கமான நாளாக இருக்கும் உங்களுடைய கோபத்தை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வீர்கள் நல்ல வாய்ப்புகள் வரும் அதை பயன்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பை கொடுக்கும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.