இன்றைய ராசி பலன் -12-02-2018

12-rasi

மேஷம்:
mesham
புதிய முயற்சிகளால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்களால் வீண்செலவு ஏற்படும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam
குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ,பிறகு விலகும். அதனால் நிதானத்தை கடைபிடிக்கவும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தை விட கூடுதல் லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிச்சியான நாள்.

மிதுனம்:
Midhunam
இன்று நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்ய செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் விழா போல் காணப்படும். எதிர்பாராத பணம் வந்து சேரும். தந்தை வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் இன்று சில மாற்றங்கள் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியுடன் அன்னோன்னியம் ஏற்படும்.

கடகம் :
மகிழ்ச்சியான நாள். அரசாங்க சார்ந்த காரியங்கள் முடிப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தாரின் ஆலோசனைக்கு பிறகே முடிவுகளை எடுங்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்விர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:
simam
ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். பிள்ளைகளுடன் கூடுதல் நேரம் செலவழியுங்கள். திடீர் பயணம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடுப்பைத்தருடன் பயணம் மேற்கொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும்.

கன்னி:

- Advertisement -

மலையில் புதிய நண்பர்கள் அறிமுகமவர்கள். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். பெற்றோர்களால் செலவுகள் உண்டாகும். எதிர்பாராத பணம் வந்து சேரலாம். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் செய்யக்கூடும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் இன்று மந்தமாகத்தான் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

துலாம்:

இன்று துணிச்சலாக காணப்படுவீர்கள். மனதில் உறுதியுடன் இருப்பிர்கள். அலுவலகத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் பணியாளர்கலால் லாபம் கூடுதலாக இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

இன்று உற்சாகமான நாளாக அமையும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். அரசாங்க சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலக பணிகளை தாங்களே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் வின் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

வாழ்க்கைத்துணை உறவுகளாகலால் ஆதாயம் உண்டாகும். இன்று சுறுசுறுபாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரால் மகிழ்ச்சி ஏற்படக்கூடம். புதிய முயற்சிகளை இன்று தவிர்த்துவிடுங்கள். அலுவலகத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உற்சாகமான நாள்.

மகரம்:
magaram
சிலர் கோவில்களுக்கு சென்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலத்தில் வழக்கமான பணிகளே இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

பிள்ளைகளால் தலைநிமிர்ந்து காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். மனைவியால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். குடும்பத்தாரால் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.

மீனம்:

அனுகூலமான நாள். பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எடுத்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். அலுவலக பணிகளை உற்சாகமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.