இன்றைய ராசி பலன் – 12-08-2020

rasi palan - 12-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய மன தைரியம் வரும். என்னடா வாழ்க்கை என்கிற விரக்தி மனப்பான்மையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வெளி நபர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எதிலும் கூடுதல் கவனமாக இருப்பது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக வெற்றி அடையலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வரவு செலவுகளில் மூன்றாம் நபர்களை நம்பாமல் இருப்பது நல்லது. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிய விஷயங்களை கற்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பயணங்களால் அனுகூலம் என்பதால் தாராளமான பயணத்தை மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வேடிக்கையாகப் பேசும் ஆற்றல் கொண்ட உங்கள் ராசிக்கு அற்புதமான அமைப்பு என்பதால் இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் நீங்கும். மேற்கொண்டு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை இருந்தாலும் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவியால் நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழியை புரிந்து கொள்ளும் நேரம் இது என்று சொல்லலாம். புதிய புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் செலுத்துவீர்கள். பொருளாதார ரீதியான சிக்கல்களை மேற் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும் சிக்கனத்தை கடைபிடிப்பது மூலம் நன்மை பெறலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிதாக தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பிரச்சனையை நினைத்து கவலை கொள்ளாமல் அதில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதை பற்றி யோசிப்பது நலம் தரும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரித்து காணப்படும். நண்பர்களின் உதவியால் மனம் நெகிழும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட கூடிய நாளாக இருக்க வாய்ப்புள்ளது. உடலில் வயிற்று மற்றும்தொண்டை பிரச்சனைகள் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு நஷ்டம் ஏற்படலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் உழைக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது.நேரமும் காலமும் பல புதிய போராட்டங்களை உங்களுக்கு எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை தரும். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் விரைவில் சரி செய்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை பெறலாம். கூடுமானவரை பெண்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அக்கறை கொள்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நல்லது நடக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய தைரியம் உருவாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக அலைச்சல் மற்றும் டென்ஷன் இருக்கும். பெண்கள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றத்தை தரும் நன்னாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மூத்த நபர்களுக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும். துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -