இன்றைய ராசிபலன் – 12 அக்டோபர் 2023

daily-rasi-palan12
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமும் சின்ன சின்ன துக்கங்களும் சேர்ந்த நாளாக அமையப் போகின்றது. முன்பின் யோசிக்காமல் எந்த ஒரு விஷயத்தையும் செய்யாதீங்க. அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக உங்களுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் எப்போதும் போல நீங்களாக இருந்தால் இன்றைய நாளை வெற்றிகரமாக கடந்து செல்லலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உறுதியான முடிவுகளை தீர்மானமாக எடுப்பீர்கள். இதுதான் எனக்கு நல்லது இதை நான் செய்து கொள்கிறேன் என்று ஒற்றை காலில் நிற்பீர்கள். சில பேர் அடம்பிடித்து கூட சில விஷயங்களை சாதிப்பீர்கள். ஆனால் அந்த விஷயங்கள் உங்களுக்கு இன்று நன்மையை தரக்கூடியதாக அமைந்துவிடும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வீர்கள். மனநிறைவான நாள் இது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் போட்டு மனதை குழப்பிக் கொள்ளக் கூடாது. நல்லது நடந்தாலும் அது உங்களுக்கு சந்தோஷம். கெட்டது நடந்தாலும் அது உங்களுக்கு சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும். எதை நினைத்தும் பெருசா கவலைப்படாதீங்க. எல்லாம் நாளை சரியாகிவிடும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் சவால் விட்ட விஷயங்களில் ஜெயித்து காட்டுவீர்கள். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் உங்களைப் பார்த்தாலே அடுத்தவர்களுக்கு பயம் இருக்கும். இன்று ராஜாவைப் போல் வாழ்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். நம்பி இறங்கி எல்லோரிடத்திலும் சண்டை போடலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்துப் பார்த்த நல்லது எல்லாம் சரியாக நடக்காது. நீங்கள் நினைத்தது ஒன்று, நடக்கப் போவது ஒன்று நாம் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் பிறகு கடவுள் எதற்கு. சின்ன சின்ன சங்கடங்களை இன்று நீங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இன்று நடக்கக்கூடிய கசப்பான விஷயங்களை அனுபவமாக எடுத்துக் கொண்டு இன்றைய நாளை கடந்து செல்லலாம்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். கட்டுமான தொழில் விற்பனையாளர்களுக்கு டார்கெட் அச்சீவ் செய்யலாம். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் நீங்கள் செய்யும் முதலீடு இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும். சுறுசுறுப்பாக வேலை செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டில் மனைவியின் வாயால் பாராட்டு பெறுவீர்கள். மனைவிக்கு விருப்பமான பொருளை வாங்கி பரிசு கொடுப்பீர்கள்‌. சுப செலவுகள் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வரக்கூடிய பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்க கூடிய தெம்பு இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ஆனால் போன போக்கில் அதை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். சில பெண்களுக்கு மாமியார் வீட்டில் இருந்து தொலைபேசியின் மூலம் சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். உறவுகளிடம் கடுமையாக பேச வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு தேவை. ஜங்க் ஃபுட் சாப்பிடாதீங்க கடைகளில் சாப்பிட சாப்பிடாதீங்க அதிக காரம் சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடாதீங்க. வயிறு சம்பந்தப்பட்ட உபாதை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அசௌகரியம் நிறைந்த நாளாக தான் இருக்கும். புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். சின்ன சின்ன பிரச்சனைகள் கொடுக்க பக்கத்தில் ஒரு தொல்லை இருக்கும். அதை சரி கட்டவே நேரம் சரியாக இருக்கும். நீங்கள் ஹச் என்று தும்பினால் கூட அதைக் கொண்டு போய் மேலதிகாரிகளிடம் சொல்லிவிடுவார்கள். பாத்து இருந்துக்கோங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெளியூர் பயணங்களில் மூலம் வெற்றி கிடைக்கும். ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். சேல்ஸ்மேனுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பேசக்கூடிய தொழில் செய்பவர்களுக்கு எல்லாமே இன்று முன்னேற்றம் தான். மற்றபடி சொந்த தொழிலில் சுமூகமான நிலை காணப்படும். பெண்களுக்கு வீட்டில் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

- Advertisement -