இன்றைய ராசி பலன் – 12-04-2021

rasi palan - 12-4-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் சிக்கல்கள் தீரும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் போட்டிகள் வழுவாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். எனினும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கையாள்வது அவசியமாகும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் நிவர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விஷயங்களை புகுத்துவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் புதிய போட்டியாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் காணப்படும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்கள் குடும்பத்தாரும் உங்களை புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வார்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபத்தை காணக் கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும்.

கன்ன
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு காரியத்தை செய்தாலும் தோல்வியில் முடியும். வெற்றியை நோக்கிய பயணத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்கள் காணப்படுவீர்கள். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பநிலை நீடிக்கும். உங்கள் உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொலைதூர நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் பொறுப்புகளை அதிகமாக்கி கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவரையும் எளிதில் எடைபோடும் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சுயதொழிலில் தங்களுக்கு தெரியாத எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணவரவு சீராக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்கள் துஷ்டனைக் கண்டால் தூர விலகுவது நலம். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண கூடிய வாய்ப்புகள் உண்டு.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொலைதூர நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை ஓங்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

English Overview:
Here we have Today Rasi Palan 12-4-2021.

- Advertisement -