இன்றைய ராசி பலன் – 12-06-2021

rasi palan - 12-6-21

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். வம்பு வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மனதில் உற்சாகம் பிறக்கும். பணம் கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து வர தாமதம் ஆகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகோதர சகோதரி வழி உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி அன்பு ஒற்றுமை சிறக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நினைத்தது நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேறும் வாய்ப்புகள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் வரவு திருப்தியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் சுறுசுறுப்பு ஏற்படும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறைவழிபாடுகள் மூலம் மன அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடின முயற்சி தேவைப்படும் கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் பணியில் கவனத்துடன் இருப்பது நல்லது. இடமாற்றம், ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் சாதகப் பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகமாக வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் திறமைக்கு சவால் விடும் சில விஷயங்கள் நடைபெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற சிந்தனைகளை கலைந்து மனதை ஒருமுகப் படுத்த முயல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்தி தரும் விஷயங்கள் நடைபெறும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமைய இருக்கிறது. எதிர்பார்க்கும் விஷயங்கள் எல்லாம் எதிர்பார்த்தபடியே நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில விஷயங்கள் காலதாமதமாக நடைபெற ஆரம்பிக்கும். குடும்ப பேச்சுவார்த்தையில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதையும் முன்கூட்டியே சிந்தித்து செயல்படுவது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு லாபம் பெருகும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. பழைய கடன் தொகைகள் வசூலாகும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண்பழி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. அண்டை, அயலாருடன் இருந்து வந்த பகை தீரும்.