இன்றைய ராசி பலன் – 13-08-2020

rasi palan - 13-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வாகன வகையில் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகையை ஈடுபடுவதில் சற்று கவனமாக இருப்பது நல்லது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காணலாம். சுயதொழில் புரிபவர்கள் மந்தநிலை காரணமாக கவலையில் இருக்க நேரிடலாம். விநாயகரை வணங்குவது நலம் தரும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடியே நிறைவுறும். புதிய தொழில் தொடங்குபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். திருமண சுபகாரிய முயற்சிகள் தடையில்லாமல் வெற்றி தரும். பைரவர் வழிபாடு நலம் தரும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். உங்கள் நீண்ட நாள் கனவுகள் நடைபெறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோக ரீதியான விஷயத்தில் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் வீண் பழிக்கு ஆளாக நேரலாம். பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வந்தால் நலம் பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சுமாரான அமைப்பு என்பதால் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சோம்பல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக உடலில் அசதி காணப்படும். பெண்கள் மேற்கொள்ளும் புதிய விஷயங்கள் உற்சாகம் தருபவையாக இருக்கும். பிள்ளைகள் வழியில் ஆதாயம் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த துன்பங்கள் யாவும் நீங்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காணப்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த மன கசப்புகள் சஞ்சலங்கள் தீரும். அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வாருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான அமைப்பு என்பதால் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் நல்லபடியாக முடியும். பேசும் வார்த்தையில் நெருப்பை அள்ளிக் கொட்டாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிலும் நிதானமாக இருப்பது அவசியமான ஒன்றாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் உற்சாகம் மற்றும் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகையால் நன்மைகள் நடைபெறும்.தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். பணவரவு தடையின்றி வந்து கொண்டிருக்கும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வாருங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவு கவலைகள் அதிகரிக்கலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நாள் பிரச்சனைகள் ஏற்படலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படுவது கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. நீண்டநாள் இழுபறியில் இருந்த வசூல் தொகை வசூல் ஆகும்.ஆடம்பரத்தை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது மூலம் பொருளாதார பிரச்சினையை சீர் செய்ய முடியும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பெரிய மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும். நேர்மறை எண்ணங்கள் சிந்தனைகள் மேலோங்கும் கூடிய இனிய நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் சில தடங்கல்கள் இருந்தாலும் வெற்றி அடையும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நன்னாளாக அமைய இருக்கிறது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -