மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. நிதானமாக ஒரு வேலையை செய்ய வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் அதிரடியாக எடுக்கக் கூடாது. அனுபவ சாலிகளின் பேச்சை கேட்டு நடக்கவும். வேலையில் உடன் வேலை செய்பவர்கள், உயர் அதிகாரிகளோடு எந்த வாக்குவாதமும் வேண்டாம். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். ஆக்கப்பூர்வமான நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்காலத்திற்கு நன்மை தரும் நிறைய நல்ல விஷயங்கள் இன்று நடக்கும். இந்த நாள் பாசிட்டிவ்வான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். மனம் நிம்மதி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிரிந்த கணவன் மனைவி உறவு ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து, ஒரு படி மேலே உயர நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். நிதி நிலைமை சீராக இருக்கும். அடுத்தவர்களுடைய மனதை புரிந்து கொண்டு நீங்களே சில விஷயங்களை, முன்கூட்டியே செய்து விடுவீர்கள். பக்குவமும், அனுபவமும் சேர்ந்து வெளிப்படும் நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் வெளிப்படும். எல்லோருடைய நலனிலும் அக்கறை காட்டுவீர்கள். முன்கோபம் குறையும் நாள். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். சிந்தனை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். விவசாயம் நல்ல லாபத்தை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள். நிறைய நல்ல விஷயங்கள் கை கூடி வரும். தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். இறை வழிபாடு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஏமாற்றமான நாளாக இருக்கும். நிறைய எதிர்பார்ப்பு வேண்டாம். உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசாதீர்கள். சூழ்நிலை பார்த்து காய்நகர்த்துவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்லது நடக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். நிறைய செலவுகள் குறையும். கட்டுமான தொழில் லாபத்தை கொடுக்கும். கமிஷன் தொழிலில் வராமல் இருந்த பணம் கையை வந்து சேரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் பிரச்சனைகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. உடல் உபாதைகள் வரலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். யாரிடமும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். உடல் அசதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தடைகள் இருக்கலாம். கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று மேன்மையாக நடந்து கொள்வீர்கள். அனுபவத்தில் சில விஷயங்களை, சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தை திறமையாக கையாளுகிறார்கள். வேலையிலும் வியாபாரத்தையும் சுமுகமான போக்கு நிலவும். நிதிநிலைமை சீராக இருக்கும். இடமாற்றத்தால் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் துணிச்சல் நல்லதை செய்யும். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். எந்த இடத்திலும் பொய் சொல்லி தப்பிக்க வேண்டும். நேர்மை என்றுமே உங்களை காப்பாற்றி விடும்.