மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பழைய கவலைகளை மறந்து விடுவீர்கள். பழைய பகைகள் எல்லாம் சரியாகும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள், கனவு நிறைவேறும் நாள். நிதிநிலமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். தேவையில்லாத டென்ஷன் குறையும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். காரிய தடை விலகும். விநாயகர் வழிபாடு பிரச்சனைகளை குறைக்கும். மாணவர்களுக்கு கல்வியின் சுறுசுறுப்பு வெளிப்படும். புது மனிதர்களின் அறிமுகம், புது அனுபவத்தை கொடுக்கும். நீண்ட தூர பயணங்களால் சந்தோஷம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில், தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய பேச்சில் ஒரு நியாயம் இருக்கும். துணிவு வெளிப்படும். நீங்க சொன்னா அது சரியாகத்தான் இருக்கும் என்று சுற்றி இருப்பவர்கள் நம்பக்கூடிய அளவுக்கு அனுபவம் வெளிப்படும் நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நேரம் கை கூடி வரும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். வியாபாரத்திலும் வேலையிலும் புது முயற்சிகள் மேற்கொள்ளலாம். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. வீண்விரய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். மன நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் போராட்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும். கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனம் வேண்டாம். நேரத்தை வீணடிக்க கூடாது. உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் அவசரம் வேண்டாம். நிதானம் இன்று நிம்மதி தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மறதி இருக்கும். முக்கியமான விஷயங்கள் செய்வதில் தடைகள், தாமதங்கள் உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. வாரம் தொடங்கும் போதே சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். கவலை வேண்டாம். அனுபவசாலிகளின் பேச்சைக் கேளுங்கள். சிந்தித்து செயல்படுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பதட்டம் பயம் இருக்கும். உறவுகளோடு சண்டை சச்சரவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்காது. மாணவர்களுக்கு, உடன் படிப்பவர்களோடு பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். மனதில் இருந்த போட்டி பொறாமை விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கும். சுற்றி இருப்பவர்களே உங்களுக்கு ஆதரவாக பேச மாட்டார்கள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொத்து தகராறு வரலாம். குடும்ப விஷயங்களை பேசும் போது நிதானம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் நிறைய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். செய்த தவறை எண்ணி கொஞ்சம் வருத்தப்படுவீர்கள். இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு பலமுறை சிந்திக்கலாம். ஆனால் அந்த ஒரு விஷயத்தை செய்த பிறகு, நாம் செய்தது தவறா சரியா எண்ணி வருத்தப்பட்டு கொண்டே காலத்தை வீணடிப்பது தவறு. குழப்பத்திலிருந்து நீங்கள் இன்று விடுபட வேண்டும்.