இன்றைய ராசி பலன் – 13-3-2020

rasi palan - 13-3-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும். புனித காரியங்களில் ஈடுபடுவர். அரசாங்க உத்தியோகம் கிடைக்கலாம். நண்பர்கள் உதவுவர். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். சிலருக்குத் தந்தைவழி உறவுகளால் சங்கடங்களும், தொல்லைகளும் ஏற்படும். அரசு வகையில் தண்டத் தீர்வைகள், வரி பாக்கிகள் என உடனே பணம் கட்டவேண்டிய கெடுபிடிகள் இருக்கும். அதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் கிடைத்துச் சிக்கல்கள் தீரும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்போதும் பணம் பற்றிய சிந்தனையாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என தெய்வீக நாளாக அமையும். அதிக உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு இருக்கும். உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, உற்சாகம் ஆகியவை ஏற்படும். தாய், மனைவி, தொழில் எனப் பெண்களால் இலாபம் உண்டு. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பதும், அவர்கள் சொல்லுக்கு மறுபேச்சுப் பேசாமல் பணிந்து நடப்பதும் பணியில் முன்னேற்றங்களைத் தரும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். மனக் கவலைகளால் மனைவியின் அரவணைப்பை குறைக்கும். தாயின் ஆரோக்கிய நிலை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகளால் உங்கள் முகத்தில் புன்னகை தவழும். பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒருசேரச் சுமப்பதில் சிரமப்படுவார்கள். வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். மாணவர்கள் மகிழ்வான கல்விச் சுற்றுலாச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றியும், அரசுத் துறையால் இலாபமும் கிடைக்கும். சிலருக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு எந்தவொரு காரியத்தைக் கையில் எடுத்தாலும் தடைகள் ஏற்படும். சுலபமான செயல்களையும் கூட கடின உழைப்புக்குப் பிறகே நிறைவேற்றிக் கொள்ள முடியும். சிலருக்கு சிரமங்கள் ஓரளவுக்குக் குறையும். சிலருக்கு வீண் அலைச்சல்களால் மன நிம்மதி கெடும். நல்லவர்களுடன் பழகுவதே நல்லது. சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் உல்லாச சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். கேளிக்கை விடுதிகளில், ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். கல்வியில் வெற்றி பெறக் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, அனுசரித்துச் செல்வது நல்லது. வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிர்பந்தம் எழும். பிரிந்த தம்பதிகள் இணைந்து மகிழ்வர். சுய தொழில் புரியும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெறும். எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். மாணவர்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. கற்பனை வளம் பெருகும். கலை துறையினருக்கு முன்னேற்றம் இருக்கும். தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தனவரவு அதிகமாவதால் தரும காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும். மாணவர்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொள்வர். நீண்ட காலமாக வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். மனைவியுடன் ஏற்படும் கருத்து முரண்பாடுகளைத் தவிர்க்கவும். பெண்களால் சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். தீய நட்பைத் தவிர்க்கவும். உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் அனுகூலமான பலன்களை தரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத்திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் ஏமாறலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கத் தாமதம் ஆகலாம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்குப் பணவரவு அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். தங்களின் சிறப்பான பணிக்காக அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும். குடும்பத்தோடு பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் செய்யாத செயலுக்குக் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். அரசுப் பணிபுரியும் பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

மகரம்
Magaram rasi
மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல திசைகளில் இருந்தும் பணம் வரலாம். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். பல பொருட்களின் ஆதாயம், சந்தோஷம், நவீன வசதிகள் மற்றும் ஆபரணங்களில் முதலீடு செய்தல் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். எவராலும் சாதிக்க இயலாத சாதனைகளைச் செய்து முடிப்பர். தனது ராஜதந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகளை அடைவார். புண்ணிய காரியங்கள், தானதர்மங்கள் செய்யும் பாக்கியம் ஏற்படும். வளம் கொழிக்கும் வயல்களால் வசதிகள் பெருகும். திடீர்ப் பயணங்கள் ஏற்படலாம். புதிய கடன்கள் வாங்க நேரலாம். இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். அரசு உதவியுடன் புதிய தொழில் தொடங்கும் காலம் கனிந்து வரும். பெரிய மனிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத தனவரவு ஏற்படும். பொன், பொருள், ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.