இன்றைய ராசிபலன் – 15 அக்டோபர் 2023

daily-rasi-palan15
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நன்மை தரக்கூடிய நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக தீரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் உண்டாகும். இன்று மாலை பிள்ளைகளோடு கோவில் அல்லது ஹோட்டல்களுக்கு சென்று நேரத்தை செலவழிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதி நிறைந்த நாளாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமையாகவே இருந்தாலும் வெளியில் எங்கேயும் செல்லாமல் வீட்டில் நிம்மதியாக தூங்கி ரெஸ்ட் எடுக்க போகிறீர்கள். நிறைவான சாப்பாடு நிறைவான தூக்கம் நிறைவான ஆரோக்கியம். அப்போது உங்களுக்கு வாழ்க்கை சொர்க்கம் தானே. இன்று ஒரு நாள் அனுபவியுங்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விடுமுறை நாளாகவே இருந்தாலும் வேலைகள் கொஞ்சம் இருக்கும். வீட்டை சுத்தம் செய்வது மல்லிகை பொருட்கள் வாங்குவது போன்ற வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குழந்தைகளுடைய படிப்பு விஷயத்தில் கவனத்தை செலுத்துவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்பவும் அமைதியான நாளாக செல்லும். எந்த ஒரு பிக்கள் பிடுங்கலும் இருக்காது. வேலை செய்யும் இடத்திலிருந்து சின்ன போன் கால் வரும். அந்த போன் காலின் மூலம் நல்ல செய்திகளை கேட்பீர்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான நிறைய நல்ல வழிகளை கடவுள் உங்களுக்கு காண்பித்துக் கொடுக்க போகின்றான். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். தெள்ளத் தெளிவாக தைரியத்தோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். அது எதிரிகளுக்கு கோபத்தை வரக் கூடிய வர வைக்கக்கூடிய விஷயமாக கூட அமையலாம். இருந்தாலும் நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு வெற்றியைத் தரும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய இந்த நாளில் பண வரவும் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். முன் கோபத்தை குறைக்கணும். தாய்மாமன் வழி உறவுகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் பொறுமையோடு பேச வேண்டும். பெரியவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதிக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டிற்கு புதுசாக ஏதாவது பொருட்களை வாங்குவது துணிமணிகளை வாங்குவது அழகு சாதன பொருட்களை வாங்குவது இந்த விஷயத்தில் எல்லாம் நீங்கள் நினைத்தது நடக்கும். அடம் பிடிக்காதீங்க, பெரிய அளவில் அடுத்தவர்களை ஏமாற்ற திட்டம் போடாதீங்க, குறுக்கு வழியில் செல்லாதீங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. நீங்கள் இன்று காலையில் எழுந்தால் குளிப்பதற்கே மாலை நேரம் ஆகும். கவலைப்படாதீங்க திங்கட்கிழமை ஓடு ஓடு ஓடு என்று ஓட வேண்டும். அதை நினைத்தால் ஞாயிற்றுக்கிழமை வேலைகளை சுறுசுறுப்பாக முடிப்பீங்க. அம்மாவுக்கு உதவி செய்யுங்க. அப்பாவுக்கு உதவி செய்யுங்கள். உபத்திரவமா இருக்காதீங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல வழிகளில் நன்மை வரும். வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு மனம் விட்டு பேச நேரம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லீவு நாளாக இருந்தாலும், சின்ன சின்ன அலுவலக வேலையை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் வரும். ஞாயிற்றுக்கிழமை தானே அப்படி என்று வீட்டில் இருக்கும் அம்மாக்களால் ஓய்வு எடுக்க முடியாது. இன்று தான் வேலை அதிகரிக்கும். பிள்ளைகளால் சின்ன சின்ன தொல்லைகள் இருக்கும். கவலைப்படாதீங்க சகஜமான பிரச்சனைகள் தான் எல்லாம் சரியாகிவிடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கும். பிள்ளைகளோடு சந்தோஷமாக நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களுடைய பர்ஸை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களில் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக இருக்கக் கூடாது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புகளை முடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீட்டில் சின்ன சின்ன கடமைகள் உங்களுக்கென்று இருக்கும் அல்லவா. அதையெல்லாம் சரியாக செய்து முடித்து விடுவீர்கள். உதாரணத்திற்கு பிள்ளைகளுடைய சைக்கிளை சரி செய்வது, பிள்ளைகளுடைய அலமாரிகள் சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் அதிக நேரம் செலவழித்து அவர்களுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்யக்கூடிய நாள் இது.

- Advertisement -