இன்றைய ராசி பலன் – 15-3-2021

rasi palan - 15-3-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனம் புரியாத உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பணத் தேவை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம் இருப்பவர்களுக்கு போட்டி, பொறாமைகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நெடிய கனவுகள் நிறைவேறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை மாறி உத்வேகம் பிறக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை கால தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் ஊடல் குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்ததை விட வர்த்தகம் சிறப்பானதாக அமையும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சரளமான பணப்புழக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்த டென்ஷனுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புதிய தெளிவு பெறுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் எல்லோருடைய மனதிலும் இடம் பிடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கடன் தொகைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் சில விஷயங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை சமாளிப்பீர்கள்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு போராடுகிறார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியே சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். சகோதர சகோதரிகளின் இடையே இருக்கும் உறவு சிக்கல் நீங்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய இராஜயோகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத வகையில் பணவரவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய எதிர்ப்புகள் குறித்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் மந்தமான நிலை மாறி திடீரென சூடுபிடிக்க துவங்கும். நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளி நபர்களிடம் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். போட்டி, பொறாமைகள் குறைந்த நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியமான நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பணியில் கூடுதல் கவனம் தேவை. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் அமையும். குடும்பத்துடன் வெளியில் சென்று வருவதன் மூலம் மன அமைதி பெறலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது போல் சில விஷயங்கள் நடைபெறும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடும் யோகமுண்டு. வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய புதிய முயற்சிகளுக்கு தடைகள் சில ஏற்படலாம். எனினும் விடா முயற்சி செய்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றம் தரும் வகையிலான அமைப்பு உள்ளது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -