இன்றைய ராசி பலன் – 15-4-2020

rasi palan - 15-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கிறது. உயர்கல்வி படிக்க கூடியவர்களுக்கு முன்னேற்றமான ஒரு நாளாக இருப்பதால் ஆராய்ச்சியில் இருப்பவர்கள் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் ஒற்றுமை நன்றாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி நீண்ட நாட்களாக வசூலிக்காமல் இருந்த பணம் திரும்பப் பெறுதல் போன்ற நல்ல நிகழ்வுகள் உண்டாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கடன் பிரச்சினைகள் இருந்தாலும் அவை கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.வீண் அலைச்சலை தவிர்த்துக்கொள்வது நல்லது.நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வரும். புதிய தொழில் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடு்வர் போன்றவற்றை சற்று தள்ளிவைப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி தவழும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நல்ல நாள் ஆகும்.உடல் நலம் நன்றாக இருந்து வரும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு சொத்து வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்கள் பேச்சுக்கு மரியாதை உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்க கூடும். மாணவர்களின் கல்வி நிலை ஏற்படும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நிகழ்வுகளை கொடுக்கக்கூடிய நல்ல நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு ஒரு மிக சிறந்த நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். வீட்டிற்கு தேவையான புதிய சாதனங்கள் வாங்குவீர்கள்.பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியில் முடியும். சொத்துகள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தருவதாக அமையும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் தேங்கி இருந்த பல வேலைகள் நல்லபடியாக முடியும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். குழந்தை மன மகிழ்ச்சி உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும்.சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறிய அளவில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நிதானமாக இருக்கவும். அரசு தொடர்பான காரியங்கள் இன்று முடிய வாய்ப்பு உள்ளது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் அணிவகுக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.