இன்றைய ராசி பலன் – 16-1-2020

rasi palan - 16-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு
இந்த நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமைய போகிறது. உறவினர்களின் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. உங்களை மதிப்பிற்கும் மரியாதைக்கும் எந்தக் குறைவும் ஏற்படாது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi
இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாகத்தான் அமையப்போகிறது. உங்கள் கணவர் உங்களின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவார். சுபநிகழ்ச்சிகள் எந்தவிதமான தடையும் இல்லாமல் நடக்கும். வெளியூர் பயணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் அதிக கவனம் எடுத்து படிப்பது முன்னேற்றம் தரும்.

மிதுனம்:
midhunam
நல்லதே நடக்கக்கூடிய நாளாகத்தான் இந்த நாள் உங்களுக்கு அமைய போகிறது. அரசாங்க சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் மட்டும் அதில் கவனமாக செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியம். படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறைபாடும் ஏற்படாது.

கடகம்:
Kadagam Rasi
சந்தோஷத்தை அதிகப்படுத்தும் நாளாகத்தான் இந்த நாள் உங்களுக்கு அமையப்போகிறது. கடுமையான வேலையாக இருந்தால் கூட சுலபமாக முடித்துவிட போகிறீர்கள். நீங்கள் எந்த வேலையைத் தொட்டாலும் இன்று வெற்றிதான். வருமானத்திற்கு தடை இருக்காது. செலவுகளை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பது முன்னேற்றம் தரும்.

சிம்மம்:
simmam
மிகவும் சிறப்புவாய்ந்து நாளாகத்தான் என்று உங்களுக்கு அமையப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் உங்களை வந்து சேரும். அந்த கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு. மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi
இந்த நாள் உங்களுக்கு லாபம் தரக்கூடிய நாளாகத்தான் அமையப்போகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றப் பாதைக்கு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
வெற்றியைத் தரக்கூடிய நாளாகத்தான் இன்று உங்களுக்கு அமையப்போகிறது. எந்த செயலிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருந்த பயம் நீங்கி விடும். கணவன் மனைவி உறவு பலப்படும்.

விருச்சிகம்:
virichigam
இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகத்தான் அமையும். அந்த மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உங்கள் வார்த்தையில் அதிக கவனம் தேவை. அனாவசியமான வாக்குவாதத்தில் யாரிடமும் ஈடுபடவேண்டாம். மற்றபடி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi
இத்தனை நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் இன்று தீர்ந்துவிடும். தொலைபேசி மூலமாக நல்ல தகவல் ஒன்று உங்களை வந்து சேரும். உறவினர்கள் இடையே சுமூகமான நிலை ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிப்பது நன்மை தரும்.

மகரம்:
Magaram rasi
நல்ல முன்னேற்றத்தை தரும் நாளாகத்தான் இன்று உங்களுக்கு அமையும் போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்களின் வருகையால் மனம் சந்தோஷம் அடையும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை.

கும்பம்:
Kumbam Rasi
இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாக தான் அமையப் போகிறது. நீண்டநாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைக்கும் நபரை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே உறவு பலம்பெறும். உங்களது பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாணவர்கள் படிப்பில் தனி கவனம் செலுத்தி படிப்பது நன்மை தரும்.

மீனம்:
meenam
சுபகாரியங்கள் நடைபெறும் நாளாக இந்த நாள் உங்களுக்கு அமையப்போகிறது. புதியதாக வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளை வாங்கும் வாய்ப்பு அமையும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.