இன்றைய ராசி பலன் 16-06-2020

Rasi Palan
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக தான் இருக்கப் போகின்றது. பணவரவு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். அலுவலகப் பணியில் மட்டும் சற்று அதிக கவனம் தேவை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சற்று சுமாரான தினமாக தான் இருக்கப் போகின்றது. அனாவசியப் பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சொந்த பந்தங்களுக்கு இடையே பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முடிந்தவரை மௌனத்தை மட்டும் பதிலாக சொல்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்ட தரும் நாளாக தான் இருக்கப் போகின்றது. எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். உங்கள் மனைவியின் மனதிற்கு பிடித்தமான பொருட்களை வாங்கித் தந்து மகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

கடகம்
கடக ராசிகாரர்கள் இன்று உங்களது வேலையை சுறுசுறுப்பாக செய்து முடித்து, பாராட்டைப் பெற போகிறீர்கள். சந்தோஷமாகத்தான் இருக்கப்போகின்றது. இருப்பினும், பண பரிமாற்றத்தில் சற்று கவனம் தேவை. உங்களது பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

- Advertisement -

கடகம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அனுகூலமான  நாளாகத்தான் இருக்க போகின்றது. உங்களது மனம் ஆன்மீகத்தில் ஈடுபடும். நிறைவேறாத ஆசை நிறைவேற போகின்றது. அலுவலகப் பணியில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. உங்களது உறவினர்கள் உங்களுடைய பிரச்சனைகளை, சரி செய்ய உதவியாக இருப்பார்கள். உறவினர்களின் அருமை பெருமைகளைப் புரிந்து கொள்ளப் போகிறீர்கள். பிள்ளைகளால் மன நிறைவு ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான செய்தி வந்து சேர போகின்றது. சம்பள உயர்வு கிடைக்கலாம். பதவி உயர்வு கிடைக்கலாம். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து சுமூகமாக இந்த நாள் செல்லப் போகின்றது. குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சற்று மந்தமான நாளாகத்தான் இருக்கப்போகின்றது. அலுவலகப் பணியில் பின்னடைவு ஏற்படும். சொந்த தொழில் வாடிக்கையாளர்களிடம், வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நிதி நிலைமை பற்றாக்குறையாக தான் இருக்கும். வரும் நாட்களில் சரியாகிவிடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சினைகள் தேடி வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் வம்பு சண்டைக்கு செல்லவில்லை என்றாலும், உங்களை தேடி பிரச்சனை வரும் என்றே சொல்லலாம். அனாவசிய பேச்சை தவிர்த்து கொள்ளுங்கள். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். குறிப்பாக மனைவியிடம் வாக்குவாதம் கூடாது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நிம்மதியான தினமாக இருக்கப்போகின்றது. உங்களது வேலைகளை எல்லாம் சரிவர முடித்துவிட்டு, பாராட்டைப் பெற போகிறீர்கள். அந்த அளவிற்கு, இந்த தினம் நிறைவாக செல்லும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சற்று சங்கடமான தினமாக தான் இருக்கப்போகின்றது. நீங்கள் நல்லது என்று ஏதாவது ஒரு வேலையைச் செய்யப் போனாலும், அதில் கெட்ட பெயர் வரும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். பொறுமையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று அலுவலகப் பணியில் சற்று சிரமம் இருக்கத்தான் செய்யும். இருப்பின் உங்களது முயற்சியில் வெற்றி கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -