இன்றைய ராசி பலன் – 17-04-2018

12-rasi
- Advertisement -

மேஷம்: நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். வெளியில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். அலுவலகத்தில் உங்கள் சமயோசிதமான ஆலோசனை பலராலும் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் முடியக்கூடும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்:

Mithunam Rasiஇன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiஅனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

simmamஉற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். காரியங்களில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிலருக்குக் காலையிலேயே குலதெய்வக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.

துலாம்:

Thulam Rasiஎதிலும் சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள்ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.

உங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

விருச்சிகம்:

virichigamபுதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. கூடுமானவரை வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்துவிடவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

Dhanusu Rasiஇன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிரிகளால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

மகரம்:

Magaram rasiபுதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், உரிய அங்கீகாரம் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பம்:

Kumbam Rasiபொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீனம்:

Meenam Rasiஎடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சியை இன்று தொடங்குவது சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -