இன்றைய ராசி பலன் – 17-1-2021

rasi palan - 17-1-2021

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுடன் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய யோகமுண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை வாங்கி வைத்த கடன் தொகைகள் குறையக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக உடன் பணிபுரியும் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பண வரவு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்க நிதானத்துடன் இருப்பது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பலவீனத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகத்திற்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சில தடைகளை சந்திக்கலாம். பூர்வீக சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை ஏற்படும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை அதிகரிக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய விஷயங்களை நினைத்து பார்க்கும் சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் தவம் ஒன்று நிறைவேறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கப் போகும் நேரமிது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சாற்றலால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையின் தத்துவம் புரிய ஆரம்பிக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபம் பெற புதிய முயற்சிகளை கையாளுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய போகின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியான கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்க கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்ப நிலை நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்