- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 17 நவம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 17 நவம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கடன் சுமை குறையும். நீண்ட தூர பயணங்களின் போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்திலிருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மருத்துவ செலவுகள் குறையும். குறிப்பாக வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு இன்று சந்தோஷம் தரும் நாளாக அமையப் போகிறது. வியாபாரத்தில் தேவையான அளவு லாபத்தை பெறுவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். எதிர்கால சேமிப்புக்கு முயற்சிக்கலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தேவைப்பட்டால் கூடுதல் வேலைகளை கூட சத்தம் போடாமல் செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த நாள் ஒரு வரப் பிரசாதமாக அமையும். இறை வழிபாடு செய்யுங்கள். மேலும் நன்மைகளை பெறலாம்.

கன்னி


கன்னி ராசிபொருத்தவரை இன்று மனதில் தேக்கி வைத்திருந்த விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். காலம் கை கூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சில பேருக்கு பொன் பொருள் வாங்கக்கூடிய யோகமும் உண்டு. ஆன்மீகம் சார்ந்த வழிபாடு மன அமைதியை தரும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாள் வராமல் தேங்கியிருந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். சொத்து வாங்கக்கூடிய யோகமும் சில பேருக்கு இருக்கு. பஞ்சாயத்துகள் வழக்குகள் எல்லாம் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். காரியத்தடை விலகும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். மனபாரம் குறையும். ஐயப்பன் வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். கடன் சுமை குறையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். திறமையாக பேசி நிறைய வேலைகளை சாதித்து விடுவீர்கள். வசீகரத் தோற்றம் உங்களை இன்னும் கூடுதல் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். தன்னம்பிக்கை கொடுக்கும். இன்டர்வியூக்கு போறவங்க சக்சஸ் ஓட திரும்பி வருவீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று அற்புதமான நாளாக இருக்கும். மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், முருகர் வழிபாடு என்று இந்த நாள் தேவைக்கு அதிகமாகவே நல்லது நடக்கப் போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். நல்ல ஓய்வு இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். இறைவழிபாடு சந்தோஷத்தை கொடுக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானமாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்க. தேவையில்லாத டென்ஷனை ஏற்றுக் கொள்ள வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள். ஐயப்பன் வழிபாடு மனதிற்கு நிறைவை தரும்.

சற்று முன்