இன்றைய ராசி பலன் – 17-2-2021

rasi palan - 17-2-2021

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். காலம் கடந்து சில விஷயங்களை உணர்ந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியை கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். வீட்டில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் செயலிலும் சொல்லும் சொல்லிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நீண்ட நாள் வசூல் ஆகாமல் இருந்த வசூலாக கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமைய சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும். திருமணம் போன்ற சுப காரிய வைபவங்களில் கலந்து கொள்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு மனதுக்குப் பிடித்த வரன் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். எனினும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய எல்லா வகையிலும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான பொறுப்புகளை கூடுதலாக சுமப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் முயற்சிக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிப்பது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமையும். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளும் உங்கள் ராசிக்கு அற்புதமான பலன்கள் பெற இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார ரீதியான இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். கொடுத்த கடன் வசூல் ஆகக்கூடிய வாயில் பிரச்சனைகள் ஏற்படலாம். நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தொழில் ரீதியான முன்னேற்றத்தை தடுப்பதற்கு சில சதித்திட்டங்கள் உங்கள் பகைவர்கள் தீட்டலாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சி அமோக பலன்களை கொடுக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறலாம். பூர்விக சொத்துக்கள் அன்புள்ள பலன் கொடுக்கும். நண்பர்களுடன் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனச் சிதறல் இல்லாமல் பணியில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் எடுத்ததெல்லாம் வெற்றி காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடை நிலை மாறி முன்னேற்ற பாதையில் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ கருத்து வேறுபாடுகளை கலைவது நல்லது. அமைதியான சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசினால் நல்லது நடக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் தெளிவான முடிவை எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் பெற தொழிலாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வழக்கு தொடர்பான விஷயத்தில் சாதகப் பலன்கள் உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையாய் கையாள்வது நல்லது. சகோதர சகோதரிகளின் ஒற்றுமையில் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல ஒரு அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு இறைவழிபாடுகள் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடன் தொகையில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்களில் எவ்வளவு அலைச்சல் இருந்தாலும் வெற்றி உங்களுக்கு தான். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்