இன்றைய ராசி பலன் – 17-4-2020

rasi palan - 17-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல்கள் தவிர்த்துக் கொள்வதும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லதாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை உண்டாகும் பொருளாதாரத்தில் சில பற்றாக்குறை ஏற்பட்டாலும் இவற்றை சரிசெய்ய நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நன்மையில் முடியும். வங்கி கடன் சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் அலைச்சலும் செலவுகளும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல பலன்கள் அள்ளிக் கொடுக்கும் நாளாகும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க வைக்கும். உயர் கல்வியை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் ஒற்றுமை நன்றாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். உயர் கல்வியை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றியடையும் நாள் ஆகும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களால் அலைச்சல்களும் செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கக்கூடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தனலாபம் உண்டாகும். புதிய வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடையும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமைக்கு உயர்வீர்கள். நீண்ட நாளாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியில் முடிவடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். வீடு வாங்குவது சொத்துக்கள் வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது போன்ற சிந்தனைகள் அதிகம் ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில சுப செலவுகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் ஒற்றுமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதில் எழும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை. பெண்களுக்கு ஏற்ற மிகுந்த நாளாகும். தொழில் முயற்சிகள் வெற்றியில் முடியும். வாகன வகையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாளாகும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்டகாலமாக சந்திக்காமல் இருந்த நண்பர்களும் உறவினர்களும் உங்களைத் தொடர்புகொள்ள இன்று வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் உயர்கல்விக்காக வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள வேண்டியது வரலாம். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்புண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவைகளில் தீர்வையும் உடனே பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். நீண்ட நாளாக இழுத்துக் கொண்டிருந்த காரியங்கள் வெற்றியில் முடியும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. கல்லூரிகளில் இடத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு கிடைக்கக் கூடும். பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருந்து வரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை அதிகரிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -