இன்றைய ராசி பலன் – 18-01-2018

Rasi-Palan

மேஷம்:
mesham
வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam

காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.. வாழ்க்கைத்துணை வழியில் பணவரவு உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம்:
இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி கிடைப்பதற்கில்லை. வேலையாள்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கடகம் :

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமாராகத்தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும்.

 

சிம்மம்:
simam

மனம் உற்சாகமாகக் காணப்படும். உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

கன்னி:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். தெய்வப்பணிகளில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

Advertisement

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

துலாம்:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்:

சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். தர்மக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அவர்களால் நல்ல திருப்பமும் ஏற்படக்கூடும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்:
magaram
எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.பிள்ளைகள் வழியில் ஆறுதல் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்காக செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கூடுதல் எச்சரிக்கை தேவை. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மீனம்:
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

ஆன்மீகம், ராசி பலன் என அனைத்து தகவல்களையும் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.