இன்றைய ராசி பலன் – 18-08-2020

rasi palan - 18-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது முயற்சிக்கு வெற்றி கொடுக்கும் நாளாக அமையும். எதிலும் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியம் மீது கூடுதல் அக்கறை அவசியம். உடல் உஷ்ண உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சனி பகவானை வணங்கி வர நல்லது நடக்கும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உத்வேகத்தை அளிக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். வயிற்று மற்றும் தொண்டை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறரிடம் அமைதியாக பேசுவது நன்மை தரும். சூரியன் பகவானை வழிபட்டு வர தொழிலில் லாபம் காண்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்கள் மேற்கொள்ள நாளாக இருக்கும். தந்தை வழியில் உறவினர்கள் மூலம் நற்செய்திகள் வரும். பூர்வீக சொத்து பிரச்சனை நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாய்வு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. விநாயகரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக இருந்த பணவரவு முடிவுக்கு வரக்கூடிய நாளாக அமையும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. சுய தொழில் புரிவோருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். துர்க்கை அம்மனை வழிபட்டு வர சுபம் உண்டாகும்.

சிம்மம

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரம் சூழ்நிலை மந்தமாக இருக்கும். தொழில் புரிவோருக்கு சற்று மந்தமாக காணப்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும். உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வராகி அம்மனை வழிபட்டு வர அமைதி மேலோங்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி நிறைந்த நாளாக அமையும். உடன் பணியாற்றுபவர்கள் இடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். தொழில் புரிவோருக்கு பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குரு பகவானை வழிபட்டு வர செல்வ அனுகூலம் காண்பீர்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றிக்கு கைகொடுக்கும். உடன்பிறந்தவர்கள் வழியே நற்செய்திகள் வரும். குடும்பத்தினரோடு அனுசரித்துப் போவது மன அமைதியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். சிவனை வணங்கி வர நல்ல முன்னேற்றம் காண்பீர்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வதால் உடல் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தினரிடையே அனுசரித்துப் போவது நன்மை தரும். நிதானமாக செயல்படுவது வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். துர்கை அம்மனை வழிபட்டு வர மன சஞ்சலங்கள் அகலும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நற்செய்திகள் வரக்கூடிய நாளாக அமையும். தந்தை வழியில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளிடையே அக்கறை காட்டுவது நல்லது. தொழில் முனைவோருக்கு இது ஒரு நல்ல நாளாக அமையும். சனி பகவானை வழிபட்டு வர நல்ல பலனை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிகுந்த நாளாக அமையட்டும். புதிய வீடு வாகனம் சொத்து வாங்கும் சூழல் உண்டாகும். சிறுசிறு மனக்குழப்பங்கள் வந்து போகலாம். குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபட்டு வர வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பயனைத் தரக்கூடியதாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல் நலத்தில் அக்கறை தேவை. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். துர்கை அம்மன் வழிபாடு மேற்கொண்டால் நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பு மிக்க நாளாக அமையும். புதிய முயற்சிகளிலும் ஆதாயம் அடைவீர்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -