இன்றைய ராசி பலன் – 18-1-2021

rasi palan - 18-1-2021

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடத்திலிருந்து பணவரவு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தனவரவு சிறப்பாக அமையும். நண்பர்களுடைய ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் சரியா தவறா என்ற புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி சீர்குலைய வாய்ப்புகள் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும். வீடு மனை வாங்கும் முயற்சியில் சாதகப்பலன் உண்டாகும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். எதிர்பார்த்தபடி சுபகாரியங்கள் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவைப்பட கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பகைவர்களின் தொல்லை டென்ஷனை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய சாதுர்யமான பேச்சால் பல விஷயங்களை அனுகூலமான மாற்றிக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் அமோகமான வெற்றிகளை குவிக்க கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கவனம் தேவை.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் புதிய முயற்சியை நோக்கி பயணிக்கும். பூர்விக சொத்துக்கள் மூலம் சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்களை காணலாம். தொலைதூர நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பல விஷயத்தில் மூன்றாம் நபர்களை தவிர்ப்பது நல்லது. பெண்கள் வெளியிடங்களில் உடைமை மீது கவனம் தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும் சீராக இருக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலன் கொடுக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்