இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2023

daily-rasi-palan18
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பாக தொடங்கும். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை முடித்து தர முடியாமல் சின்ன சின்ன திட்டு வாங்க வாய்ப்புகள் உள்ளது. யாருக்கும் எந்த விஷயத்திலும் வாக்கு கொடுக்காதீங்க. முடிந்தவரை முயற்சி செய்கிறேன் என்று இன்றைய நாளை கடந்து செல்லலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும். மனதில் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தோடு இன்று மாலை வெளியிடங்களுக்கு சென்று விட வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் பிசினஸில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மனதில் நினைத்த நல்ல காரியங்கள் நடக்கும். தீபாவளிக்கு தேவையான பர்சேஸை தொடங்கி விடுவீர்கள். அதற்கு உண்டான வருமானமும் கையை வந்து சேரும். குடும்பத்தோடு சந்தோஷமாக இந்த நாளை கடந்து செல்லலாம்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று புத்துணர்ச்சியான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரும் நாளாக அமையும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக எந்த ஒரு விஷயத்திலும் செயல்படக் கூடாது. பொறுப்பான வேலையில் இருப்பவர்கள், தங்களுடைய வேலைகளை பொறுப்போடு செய்ய வேண்டும். இல்லை என்றால் பாதிப்புகள் உங்களை மட்டும் சேராது. அடுத்தவர்களையும் சேரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் முழுமையாக பார்ட்னரையோ அடுத்த வியாபாரிகளையும் நம்ப வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியான நாளாக செல்லும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. பிரச்சனைகள் இல்லை. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். செய்யும் தொழில் வேலை எல்லாவற்றிலும் மன நிறைவான போக்கு நிலவும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாட்டில் செலவு செய்வீர்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வர வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்தி தொலைபேசியில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாமனார் உறவு வழியின் மூலம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் பிரச்சினைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே வாயை திறக்காமல் இன்றைய நாளை நடத்திச் செல்வது நல்லது. இவர்கள் வம்பு வளர்க்கத் தான் வருகிறார்கள் என்று தெரிந்தால் அவர்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்காதிங்க. துஷ்டனை கண்டால் தூர விலகு இதை இன்னைக்கு மனதில் வச்சுக்கோங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். நீண்ட நாள் கனவு நினைவாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பு. பணவரவு இருக்கும். புதுசாக ஏதாவது பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் சரியாகும்‌. வழக்கறிஞர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கப் போகும் நாள். ஆசிரியர்கள் பாடகர்கள் இவர்களுக்கு சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சில பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை வீட்டு சாப்பாடு சாப்பிட்டால் நல்லது.

- Advertisement -