இன்றைய ராசி பலன் – 19-05-2018

12-rasigal

மேஷம்:

Mesham Rasiஇன்று உற்சாகமான நாளாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்:

Rishabam Rasiசகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்கள் வருகை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

மிதுனம்:

midhunamஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். தாயின் உடல்நலன் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். இன்று அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

- Advertisement -

கடகம்:

Kadagam Rasiகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படுகிறது சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை யோசித்து துவங்குவது நல்லது.

சிம்மம்:

simmamஇன்று செலவுகள் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கன்னி:

Kanni Rasiஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்கவேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

துலாம்:

Thulam Rasi அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வைகாசி மாத ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்

விருச்சிகம்:

virichigam அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

தனுசு:

Dhanusu Rasiபழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். பண தேவை அதிகரிக்கும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மகரம்:

Magaram rasiமுக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasiஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசினால் பிரச்னைகள் தீரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களின்போது கூடுதல் கவனம் தேவை.

மீனம்:

Meenam Rasiசிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.