இன்றைய ராசி பலன் – 19-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiவாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

midhunamசிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிற்பகலுக்குமேல் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiஅத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

ஆனி மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சிம்மம்:

- Advertisement -

simmamகுடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

கன்னி:

Kanni Rasiசிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் கேட்ட உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

துலாம்:

Thulam Rasiமேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

விருச்சிகம்:

virichigamதாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.பிள்ளைகள் வழியில் ஆறுதல் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களுடன் சிறு அளவில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.

தனுசு:

Dhanusu Rasiபுண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

மகரம்:

Magaram rasiவெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasiபிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

மீனம்:

meenamமனம் உற்சாகமாகக் காணப்படும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

இன்றைய ராசி பலன் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

- Advertisement -