மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. யாரிடமும் முன்கோபம் வேண்டாம். அநாவசியமாக கடன் வாங்கக்கூடிய பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். நலமான சுகமான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். இந்த விடுமுறை நாள் குடும்பத்தோடு சந்தோஷமாக செல்லும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். இருந்தாலும் பம்பரம் போல உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். சுபசெலவுகள் ஏற்படும் சந்தோஷம் கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வேலைகளும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலையை கையில் எடுத்து முடிப்பீர்கள். இந்த நாள் மன நிறைவோடு இருக்கும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். தேவையற்ற பகை தானாக விலகும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு ஒற்றுமை இருக்கும். சுபசெலவுகள் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்களுக்கும், வீட்டிற்கும் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் மனதில் தேக்கி வைத்திருந்த ஆசை வெளிப்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப காரியத்தடை விலகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகளும் போராட்டங்களும் இருக்கும். ஒரு விஷயத்தை கையில் எடுத்தவுடன் வெற்றி பெற முடியாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிதானத்தை கையாளுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் விலகும் நாள். மன நிம்மதி கிடைக்கும் நாள். தேவையில்லாத டென்ஷன் குறையும். சந்தேகங்கள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். நீங்க தூர பயணங்களால் மன அமைதி கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும் நாள் இன்று.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் புது முடிவுகள் எடுக்கலாம். எதிர்கால சேமிப்புக்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பிள்ளைகளுடைய படிப்பில் இருந்து வந்த தடைகள் விலகும். மன நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கக் கூடிய நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த நாளில், மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. குழப்பமான நிலை, தெளிவு பெறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அநாவசியமாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் சௌகரியமான நாளாக அமையப் போகிறது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.