இன்றைய ராசி பலன் – 19-08-2020

rasi palan - 19-8-2020
- Advertisement -

மேஷம

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதையும் தைரியமாக செய்யக் கூடிய சூழல் ஏற்படும். வயிற்றுப் மற்றும் வாய்வு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் புரிவோருக்கு சற்று மந்தமாக காணப்படும். சூரியன் பகவானை வழிபட்டு வர தொழிலில் லாபம் காண்பீர்கள்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்கள் மேற்கொள்ள நாளாக இருக்கும். தந்தை வழியில் நற்செய்திகள் வரும். பூர்வீக சொத்து பிரச்சனை நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிறரிடம் அதிகம் பொறுமையாக பேசுவது நன்மை தரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாய்வு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. நண்பர்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை சாதகமாக அமையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத பண வரவு வீட்டு தேவைகளை பூர்த்தி செய்யும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்புமிக்க நாளாக அமையும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தவர்கள் வகையில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி அடைவீர்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். லக்ஷ்மி அம்மனை வழிபட்டு வர பண பிரச்சனை விலகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதானமாக செயல்படுவது வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்கள் வழியே நற்செய்திகள் வரும். குடும்பத்தினரோடு அனுசரித்துப் போவது மன அமைதியை ஏற்படுத்தும். தொழில் முனைவோருக்கு இது ஒரு நல்ல நாளாக அமையும். விநாயகரை வழிபட்டு வர வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமாக காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவும். பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல்நலத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நன்மை தரும். சிவனை வணங்கி வர நல்ல முன்னேற்றம் காண்பீர். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு இனிய நாளாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வெளியூர் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் மிகுந்த நாளாக காணப்படும். சுயதொழில் புரிவோருக்கு சற்று மந்தமாக காணப்படும். புது உத்வேகத்துடன் தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. முருக வழிபாடு செய்வது சிறப்பு உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உத்வேகத்தை அளிக்கும். பழைய கொடுக்கல்-வாங்கல் முடிவுக்கு வரும். வயிற்றுப் மற்றும் வாய்வு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பல நாட்களாக இழுபறியில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும். சனி பகவானை வழிபட்டு வர தொழிலில் லாபம் காண்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தலைவலி கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. தொழில் புரிவோருக்கு சற்று மந்தமாக காணப்படும். எதையும் தைரியமாக செய்யக் கூடிய சூழல் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகமாக ஏற்படும் நாளாக அமையும். எதையும் தைரியமாக செய்யக் கூடிய சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசியல் வழியில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. விநாயகரை வழிபட்டு வர நல்ல பலனை பெறலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -