இன்றைய ராசிபலன் – 19 அக்டோபர் 2023

daily-rasi-palan19
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த ஒரு வேலையிலும் ஆர்வம் இருக்காது. முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. வாகனத்தை செல்லும்போது கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசி காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும். புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். வாரா கடன் வசூல் ஆகும். சேமிப்பு உயரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. விடா முயற்சி செய்தால் விஸ்வரூப வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கும். நீண்ட நாள் செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். கட்டுமான பொருள் விற்பனையாளர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். எந்த வேலையை செய்வது எந்த வேலையை விடுவது என்ற சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். மற்றபடி வருமானத்தில் பிரச்சனை இருக்காது. தீபாவளி செலவுக்கு தகுந்த நேரத்தில் கைக்கு பணம் வந்து சேரும். வீட்டில் தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன்பின் தெரியாத நபர்களை நம்ப வேண்டாம். கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது வரயாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனை இல்லை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும். தடைபட்டு வந்த சுப காரியங்களை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். குழந்தைகளின் போக்கில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். வேலை வேலை என்று இருக்காமல் குடும்பத்தையும் கொஞ்சம் பார்க்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நல்லது இருந்தால், கெட்டது இருக்க தானே செய்யும். ஆகவே இரண்டையும் நீங்கள் அனுசரித்து செல்ல வேண்டும். இந்த நாள் இறுதியில் பிரச்சனைகள் எல்லாம் சரியாகி நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். யாரைக் கண்டும் பயப்பட மாட்டீங்க. உங்களுடைய பேச்சில் ஒரு கர்வம் இருக்கும். திமிரு இருக்கும். இதனால் சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வார்த்தையில் கவனம் தேவை. உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் சவால் விடாதீங்க பின்பு பிரச்சனையாகிவிடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். யார் என்ன சொன்னாலும் சரி நான் என் வேலையை செய்வேன் என்று நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். தாய்மாமன் வழி உறவால் நன்மை உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன பிரச்சனைகள் காத்துக் கொண்டிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பிரஷர் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடன் வேலை செய்பவர்கள் உதவ மாட்டார்கள். உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து பிரச்சனைக்கு உள்ளாக வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். யாரையும் நம்பி ஏமாறாதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் அற்புதமான நாளாக இருக்கும். விற்பனை தொழிலில் இருப்பவர்கள் உங்களுடைய டார்கெட்டை சரியாக செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளிடம் பாராட்டு வாங்குவீர்கள். சொந்த தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரம் புதிய முதலீடு நல்ல லாபத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

- Advertisement -