இன்றைய ராசி பலன் –26-10-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

mesham

சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்கள் துணையின் உடல் னலத்தை எண்னி நீங்கள் கவலையுறுவீர்கள்.

- Advertisement -

ரிஷபம்:

rishabam

எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

மிதுனம்:

Midhunam

இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். காதலரின் அம்பில் இருந்து தப்புவது கஷ்டம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள்.

- Advertisement -

கடகம்:

Kadagam

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள் – தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்

சிம்மம்:

simam

உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். பரஸ்பரம் கருத்துகளை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயர் கெடும் வாய்ப்பு அதிகம். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும்.

கன்னி:

ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். உங்களின் இறுக்கமான மனநிலை சகோதரரின் மனதை பாதிக்கும். அன்பு பிணைப்பு நீடித்திட பரஸ்பர மரியாதை நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மதிப்புமிக்க உங்களின் பரிசு / அன்பளிப்புகளால் உற்சாகமான நேரங்களை உருவாக்க முடியாமல் போனாலும், உங்கள் காதலரால் அது புறந்தள்ளப்படலாம். காரணங்கள் சொல்வதை உங்கள் பாஸ் ஏற்றுக் கொள்ள மாட்டார் – அவரிடம் நல்ல பெயரை தக்க வைக்க வேலையை செய்யுங்கள். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.

துலாம்:

குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்.அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும்.திருமண வாழ்வை இனிமையாக்கை நீங்கள் இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இன்று உங்களுக்கு பலன் தரும்.

விருச்சிகம்:

உடல் மற்றும் மன நோய்க்கு மகிழ்ச்சியின்மைதான் காரணமாக இருக்கும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும்.  பின்னர் வருந்தக்கூடிய வகையில், பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாதீர்கள். செலவுமிக்க எந்த முயற்சியில் கையெழுத்திடுவதற்கு முன்பும் உங்கள் முடிவு செய்யும் திறனை பயன்படுத்துங்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணையுடனான உங்கள் மன ரீதியான பிணைப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் தோன்றும். ஆனால் அது நிஜமல்ல.

தனுசு:

மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். புதிய வாடிக்கையாளருடன்பேச்சு நடத்த இது அற்புதமான நாள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.

மகரம்:

magaram

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கும்பம்:

வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள். பிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாக இருக்கும் நாள்.உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

மீனம்:

மன அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக புன்னகை வேலை செய்யும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் துணையின் உடல் நல பாதிப்பால் நீங்கள் ஒருவரை சந்திக்க எண்ணியிருந்த திட்டம் பாதிக்கும். ஆனால் இதன் மூலம் உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிட முடியும்.

- Advertisement -