இன்றைய ராசி பலன் – 2-7-2020

rasi palan - 2-7-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முன்னேற்றத்துக்கான ஒரு நாளாக அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பழைய சொத்துப் பிரச்சினைகள் சாதகமாகும். தலை கழுத்து போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முருகன் வழிபாடு சிறப்பு உண்டாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தும் நாளாக அமையும். எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கி சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்களுடன் அனுசரித்துப் போவதால் நன்மை காண்பீர்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சனி பகவான் வழிபாடு சந்தேகங்களை போக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். மாணவர்கள் தங்களது திறமைகளை சாதனை படைப்பார்கள். அலுவலகத்தில் தங்களின் புதிய முயற்சிகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலில் அவ்வப்போது சற்று ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புண்டு. மாரியம்மனை வழிபட்டு வர குடும்பத்தில் மகிழ்ச்சி காண்பீர்கள்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப நிகழ்ச்சிகள் கைகூடும் நாளாக அமையும். திருமண வாய்ப்புகள் கைகூடும். கூட்டாளிகள் உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். சனீஸ்வர பகவான் வழிபாடு சஞ்சலங்களை போக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். காரிய தடைகள் ஏற்பட்டாலும் அதை வெற்றியுடன் முடிப்பீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளை செய்வதால் நல்ல லாபம் காண்பீர்கள். குடும்பத்துடன் அனுசரித்துப் போவது நல்லது. ஐயப்பனை வணங்கி வர நன்மைகள் நடக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு கிடைக்கும் நாளாக அமையும். பழைய முதலீட்டால் திடீர் லாபம் ஏற்பட வாய்ப்புண்டு. பண வரவு செலவுகளில் கவனம் தேவை. குடும்பத்தினரிடையே ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. கூட்டாளிகளின் சூழ்ச்சியை புரிந்து கொள்வீர்கள். நவக்கிரக சிறப்பு வழிபாடு தொழிலும் குடும்பத்திலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன அமைதியற்ற சூழல் ஏற்பட நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடன் இருப்பவர்கள் தங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும். கால பைரவரை வணங்கி வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் ஒரு நல்ல நாளாக இருக்கும். பழைய கடன் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல முடிவைத் தரும். புதிய முதலீடு செய்ய நல்ல நாளாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். ஸ்ரீதேவி தாயாருக்கு சிறப்பு வழிபாடு செய்து வர குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபிட்சமான நாளாக அமையும். இல்லத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. காளியம்மனை வணங்கிவர தன்னம்பிக்கையையும் சிறப்பும் பெறுவீர்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமான சூழ்நிலை கூடிய நாளாக இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உன்னோட நேரத்தில் ஏற்ற இறக்கங்கள் காண்பீர்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். கருட பகவானை வணங்கி வர குழப்பங்கள் அகலும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாற்றத்தை உருவாக்கும் மிகச் சிறந்த நாளாக அமையும். புதிய முதலீடுகளால் லாபம் காண்பீர்கள். துணிச்சலோடு காரியத்தை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சுபகாரியங்கள் கைகூடும். வாய்வு சம்பந்தமான உடல் உபாதைகள் வர வாய்ப்புண்டு. விநாயகர் வழிபாடு இல்லத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரியத்தடைகள் உடைய நாளாக இருக்கும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக நடைபெறும். வீண் அலைச்சல்கள் மனசஞ்சலங்கள் ஏற்படும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. புதிய பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும். குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டுவர காரியத்தடைகள் நீங்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.