இன்றைய ராசி பலன் -20-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
குடும்பத்தாரால் வீண்செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் தாமதமாகும். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கக்கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.

மிதுனம்:
Midhunam
மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த காரியங்கள் சுலபமாக முடியும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். மாலைக்குள் நல்ல செய்தி வந்து சேரும். புதிய ஆபரணங்கள் வாங்கக்கூடும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்த படியே அமையும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

கடகம் :
பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிர்ப்பித்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். மாலையில் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் கூடுதலான பணிகள் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:
simam
அலுவலக பணிகளால் வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள். புதிய முயற்சிகளை தவிர்த்துவிடுங்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

- Advertisement -

கன்னி:

அரசாங்க சார்ந்த காரியங்கள் சுலபமா முடியலாம். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோகியத்தில் கவனம் செலுத்துங்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் கூடுதலான லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை குறைத்துக்கொள்ளுங்கள்.

துலாம்:

எதிர்பார்த்த பணம் வர தாமதமாகும். அரசு சார்ந்த காரியங்களால் ஆதாயம் உண்டாகும். பெற்றோர்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்:

தாய் வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். மாலையில் நண்பர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு:

குடும்பத்தாருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். அலுவலக பணிகளில் பணியாளர்களின் உதவியை நாடுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மகரம்:
magaram
வாழ்க்கைத்துணைவி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

கணவன் மனைக்குள் அந்நோனியம் பெருகும். இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாக அமையும். அலுவலக பணிகள் கூடுதலாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

மீனம்:

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தாருடன் கோவில்களுக்கு சென்று பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலக பணிகளால் சோர்வாக காணப்படுவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -