இன்றைய ராசிபலன் – 20 அக்டோபர் 2023

daily-rasi-palan20
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் அதிகமாக இருக்கும். மேலதிகாரிகள், பெரிய பதவியில் இருப்பவர்கள் என்று எல்லாம் பார்க்க மாட்டீங்க. உங்க இஷ்டத்துக்கு மனதில் பட்டதை பேசி விடுவீர்கள். இதனால் சில பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அமைதியாக இருப்பது தான் நல்லது. குடும்பத்தில் சில முக்கியமான விஷயங்களை பற்றி பேசி முடிவு எடுப்பீர்கள். நல்லபடியாக சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல வரவு நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்து இருந்த பணம் கைக்கு வந்து சேரும். தீபாவளிக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று இன்னைக்கு சின்னதா பிளான் பண்ணிடுவீங்க. குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். மாமனார் வழி உறவால் நல்ல ஆதரவு இருக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்ல சொன்ன பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மூன்றாவது நபர்களை நம்பி உங்களுடைய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவுகளால் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. வாக்குவாதம் ஏற்படும் சமயத்தில் கொஞ்சம் அமைதி காக்கவும். பெரிய பிரச்சினையாகி விட்டால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படும். மற்றபடி வேலை செய்யும் இடம் சொந்த தொழில் வியாபாரம் இவைகளில் நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக தான் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. மனைவிக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள். அடுத்தவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். வியாபாரத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை எக்காரணத்தைக் கொண்டும் தரை குறைவாக நடத்த வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் அற்புதம் வாய்ந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பர்கள் உறவுகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணத்தின் மூலம் ஒரு சில பேருக்கு அலைச்சல் ஏற்படும். உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் இன்று உங்களுக்கு தகுந்த நேரத்தில் தக்க உதவியை செய்வார்கள்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். உங்களுடைய சகோதரர்களால் இன்று உங்களுக்கு ஒரு மன மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவம் நடக்க வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் சரியாகிவிடும்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவு நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகளாக தான் இருக்கும். தீபாவளிக்கு பட்டாசு துணிமணிகள் வாங்க கூட வாய்ப்புகள் இருக்கிறது. அதை எல்லாம் சரிவர செய்து முடிப்பீர்கள். ஆனால் இன்று புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். சொந்தத் தொழிலில் புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் யார் கிட்டயும் புதுசா போய் பழகாதீங்க. முன் பின் தெரியாத நபரிடம் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பார்கள். சுறுசுறுப்போடு செயல்பட்டு பாராட்டையும் புகழையும் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். நீங்கள் சொன்ன ஐடியாவின் மூலம் உங்களுடன் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்றைய நாள் எந்த பெரிய பிரச்சனையிலும் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இல்லை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதுசாக ஏதாவது பொன் பொருள் வாங்குவதாக இருந்தால் வாங்கலாம். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய பிள்ளைகளின் போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய போக்கை கண்காணிக்காவிட்டால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலை பளு நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் என்னதான் உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. உடல் அசதி இருக்கும். வீண் அலைசல் தலைவலி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தந்தை வழி உறவில் சின்ன சின்ன பிரச்சனைகள் காத்திருக்கிறது ஜாக்கிரதை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் போனது, வந்ததை சரி செய்வீர்கள். அதற்கு சின்ன சின்ன செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது பழுதுபார்க்கும் பணியில் ஆர்வம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்த தொழில் வியாபாரம் எல்லாம் உங்களுக்கு சாதகமாகத்தான் செல்லும் எந்த பிரச்சனையும் கிடையாது.

- Advertisement -