இன்றைய ராசி பலன் – 20-12-2020

rasi palan - 20-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நண்பர்களுடன் பழைய நினைவுகளை அசை போடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில்ரீதியான முன்னேற்றத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு இனிய நாளாக அமையும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்க கூடிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெண்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களை சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உடனிருப்பவர்களே ஏமாற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. எடுத்த முயற்சிகளை காலதாமதமின்றி வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் அமைதி குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்யாமல் பொறுமையை கையாள்வது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் காண்பீர்கள்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்க கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பிள்ளைகள் மூலம் சில உள்ளம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெண்களுக்கு பொருள் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான யோகம் தரக்கூடிய அமைப்புகள் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கான யோகம் கைகூடி வரும். பெண்களுக்கு உடல் சோர்வு காரணமாக டென்ஷன் அதிகரிக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கவனம் முழுவதும் அலை பாய கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால் வேலையில் கவனச்சிதறல் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகும். எதையும் தீர்க்கமாக ஆலோசித்து முடிவெடுப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகும். ஒருவரை ஒருவர் நல்ல சூழ்நிலையில் மனம் விட்டு பேசுவது நல்லது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடை ப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் குதூகலத்துடன் காணப்படும். பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் இருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனக் கசப்புகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்