இன்றைய ராசி பலன் – 20-2-2021

Rasi palan

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் எல்லா முயற்சியும் கைகொடுக்கும் வகையில் அமைய இருக்கிறது. நீண்ட நாளாக தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீராத துன்பங்கள் தீர கூடிய அற்புதமான நாளாக உங்களுக்கு அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை சிலர் பிரிக்க பார்ப்பார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காலத்தினால் செய்த உதவியை மறந்து போகாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் அதிக லாபத்தை காணலாம்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் கூடுதல் ஆகும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் முன்னேற்றத்தில் குறைவிருக்காது. இன்று உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குலதெய்வ அருள் பெறுவதற்கான இனிய நாளாக அமைய இருக்கிறது. இறை வழிபாடுகள் மூலம் மன அமைதியை காண்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைப்பதில் சில சிக்கல்கள் நீடிக்கலாம். எவரையும் எளிதில் எடை போடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சவால் ஒன்று காத்திருக்கிறது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் பொறுமையை இழக்காமல் காப்பது நல்லது. பொறுமையிழந்து செயல்படும் உங்களுடைய செயல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த திட்டமிடல் மேலோங்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. காலம் கடந்து சில விஷயங்களை உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக நண்பர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நன்மை தரும். மூன்றாம் மனிதர்களிடம் தேவையற்ற வம்பு வழக்குகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனத்துடன் செயலாற்ற கூடிய நாளாக இருக்கிறது. வாகன ரீதியான பயணங்களை மேற்கொள்ளும் பொழுது எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் குறைவாக எடை போடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பலம் அறிந்து செயல்பட கூடிய நாளாக இருக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் பிரச்சனைகள் நீடிக்கும். போட்டியாளர்களை எதிரியாக நினைக்காமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு லாபம் காணலாம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சாதிக்க நினைக்கும் சில விஷயங்கள் உங்களுக்கு எதிராக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தன்னம்பிக்கையை தளரவிடாமல் தொடர் முயற்சியை மேற்கொள்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை மேற் கொண்டு அதிக லாபம் காண முயற்சி செய்வீர்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் இன்றைய நாள் உங்களுடைய விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குலதெய்வ வழிபாட்டை மேற் கொள்பவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இடம் பாராட்டுகளை பெரும் அதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆரோக்யத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதுவரை உங்களுக்கு நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் தீரும். சகோதர சகோதரிகளின் வழியே ஒற்றுமை ஓங்கும். தொலைதூர சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

முகூர்த்த நாட்கள் விடுகதைகள்